அடிப்படை இங்கிலீஷ் கூட தெரில! திருதிருவென முழித்த குஜராத் இளைஞர்கள்.. அமெரிக்க நீதிமன்றத்தில் காமெடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற குஜராத் இளைஞர்கள் செய்த செயல் அந்நாட்டு நீதிபதியையே கடுப்பாக்கி உள்ளது.

Recommended Video

    IELTS Exam | மோசடி செய்த குஜராத் இளைஞர்கள்..

    இந்தியா போன்ற ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குப் படிப்பு மற்றும் வேலை செய்யச் செல்லும் நபர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்.

    இதற்காக IELTS எனப்படும் International English Language Testing System என்ற தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெற்றால் தான் ஆங்கிலம் பேசும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்..

     சிக்கினர்

    சிக்கினர்

    இதனிடையே இந்தத் தேர்விலும் இந்தியாவில் மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், கனடா நாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஆறு இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று உள்ளனர். அமெரிக்காவின் அக்வெசாஸ்னேவில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஆற்றின் வழியே அவர்கள் அமெரிக்காவுக்குள் வர முயன்று உள்ளனர். அப்போது அந்த பக்கம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளிடம் அவர்கள் வசமாகச் சிக்கிவிட்டனர்.

     குஜராத்

    குஜராத்

    அவர்கள் அனைவரும் 19 முதல் 21 வயதானவர்கள் என்பதும் அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அவர்கள் ஆறு பேரில் நால்வர் குஜராத்தின் மெஹ்சானாவைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் குஜராத்தின் காந்திநகர் மற்றும் படான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இதையடுத்து அமெரிக்காவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

     ஆங்கிலம் தெரியவில்லை

    ஆங்கிலம் தெரியவில்லை

    அங்கு அவர்களிடம் நீதிபதி கேட்ட சில அடிப்படை கேள்விகளுக்குக் கூட அவர்களால் ஆங்கிலத்தில் பதில் அளிக்க முடியவில்லையாம். இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் இந்தி மொழிபெயர்ப்பாளரை அழைத்து வழக்கு விசாரணையை நடத்தி உள்ளனர். கனடாவுக்கு வர அவர்கள் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் IELTS தேர்வில் 6.5- 7 மதிப்பெண்களை பெற்று இருந்தார்களாம். இத்தனை மார்க் பெற்றும் அவர்களால் அடிப்படை ஆங்கிலம் கூட ஒழுங்காகப் பேசத் தெரியாமல் போனதைக் கண்டு நீதிபதிகளே சற்று குழம்பிவிட்டனர்.

     IELTS

    IELTS

    இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் பல்வேறு ஊடகங்களும் கூட செய்திகளை வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மும்பையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் குற்றவியல் மோசடி விசாரணைப் பிரிவு, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாரை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்தது.

     சிசிடிவி இல்லை

    சிசிடிவி இல்லை

    அமெரிக்காவில் பிடிபட்ட அந்த மாணவர்கள் குஜராத்தின் நவ்சாரி பகுதியில் தான் IELTS தேர்வு எழுதி உள்ளனர். சரியாகத் தேர்வு எழுதிய சமயத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், IELTS உரிமையாளர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.

     மாபெரும் மோசடி

    மாபெரும் மோசடி

    முதற்கட்ட விசாரணையில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்வதில் இதில் மாபெரும் மோசடி நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+