சவுதி ஏர்லைன்ஸ் விமானம்.. 250 ஹஜ் பயணிகளுடன் லக்னோ விமான நிலையத்தில் திடீர் சிக்கல்.. வீடியோ பாருங்க
டெல்லி: சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு விமானம் வந்தது. விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தரையிறங்கும் போது விமானத்தின் சக்கரங்களில் ஒன்றிலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வந்ததாக சொல்லப்படுகிறது. நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை. விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நிலைமையை உடனடியாக சரி செய்தனர்.
விமானங்களில் அடுத்தடுத்து நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள், பயணிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது. விமானங்கள் பொதுவாகவே பறப்பதற்கு முன்பு பல்வேறு கட்ட தொழில்நுட்ப ரீதியான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும். விமானத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை அறிந்த பின்னரே விமானத்தை விமானி இயக்க அனுமதிக்கப்படுவார். அதையும் தாடிவிமானத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால் அதை சரி செய்வதற்கான எல்லா நடவடிக்கையும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அதிகாரிகளால் உதவ முடியும்.

இரட்டை என்ஜின்கள்
அதேபோல் விமானம் வானத்தில் பறக்க முயலும் பறவைகள் மோதி பாதிப்பு ஏற்பட்டு என்ஜினில் கோளாறு ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காகவே இரண்டு என்ஜின்கள் விமானங்களில் இருக்கும். ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை என்றாலும், இரண்டாவது இன்ஜின் மூலம் விமானத்தை இயக்கி, செல்ல வேண்டிய இடத்திற்கு விமானியால் இயக்கிவிட முடியும். விமானங்கள் டேக் ஆப் ஆகும் போது, விமானத்தை மேலே செலுத்தும் கருவி திடீரென வேலை செய்யாமல் போனால் அல்லது விமானத்தின் இறக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த விமானம் மேலேயே எழும்பாது.. எனவே என்ன சிக்கல் என்றாலும் நிச்சயம் சமாளித்துவிட முடியும்.
விமானத்தில் ஏற்படும் பாதிப்புகள்
அதேநேரம் விமானத்தில் திடீரென ஏற்படும் என்ஜின் இழப்பு, விமானம் பறக்கும் போது, திடீரென ஏற்படும் மோசமான வானிலை, பறவை கூட்டங்கள் திடீரென மொத்தமாக விமானத்தில் மோதுவது, விமானம் மேலே எழும்பும் போது காற்றின் வேகமாறுப்பாட்டில் ஏற்படும் நடைமுறை சிக்கல், விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் வானிலை மாற்றங்கள் போன்ற ஏதாவது ஒரு சிக்கல்தான் விமானத்தை மோசமாக பாதிக்கும். அதேபோல் ஒரு சில நேரங்களில் விமானிகள் சிறு தவறுகளும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது உண்டு.
அடுத்தடுத்து சம்பவங்கள்
அண்மை காலமாக விமான விபத்துக்கள் தொடர்பாக அதிகமான செய்திகளை பார்த்திருப்பீர்கள். அகமதாபாத் விமான விபத்திற்கு பின்னர், உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருந்தது. அடுத்ததாக லண்டனில் இருந்து இந்தியா வந்த பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டிருந்தது. அதை உடனடியாக விமானி கண்டுபிடித்ததால் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதேபோல் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஏசி வேலை செய்யாத காரணத்தால் பயணிகள் சில மணி நேரம் அவதிப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
சவுதி ஏர்லைன்ஸ் விமானம்
அந்த வரிசையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது சிக்கலை சந்தித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து சனிக்கிழமை இரவு 10:45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் விமானம், காலை 6:30 மணியளவில் லக்னோவில் தரையிறங்கியது. விமானத்தில் சுமார் 250 பயணிகள் இருந்தனர்.
सऊदी से लखनऊ आए हज यात्रियों को परेशानी,प्लेन लैंडिंग के दौरान निकल रही थी चिंगारी।भगवान भरोसे गनीमत रही 250 यात्री सुरक्षित हैं। pic.twitter.com/tr7gFRyPSb
— Pankaj (@AtWorkAmarUjala) June 15, 2025
ஹஜ் யாத்ரீகர்கள் விமானம்
ஹஜ் யாத்ரீகர்கள் வந்த அந்த விமானம் நேற்று காலை லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறால் சிக்கலை சந்தித்தது. தரையிறங்கும் போது விமானத்தின் சக்கரங்கள் ஒன்றிலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வந்தது.. விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டதால், நல்ல வேளையாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கினார்கள். விமானத்தில் ஏற்பட்ட திடீரென கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது, சக்கரங்கள் ஒன்றிலிருந்து புகை மற்றும் தீப்பொறி வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications