டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீல் சேரில் சென்று உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்.. பரவும் வீடியோ.. குவியும் பாராட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: வீல் சேரில் அமர்ந்து கொண்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டவர், ''மாற்றுத்திறனாளி பெண்ணின் உத்வேகத்திற்கு சல்யூட் செய்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் போன் ஆதிக்கம் நிறைந்துள்ள தற்போதைய வாழ்க்கை முறையில் மக்களின் வேலையும் கணிசமாக குறைந்துவிட்டது.

முன்பெல்லாம் பிடித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் ஹோட்டலை தேடி அலைந்தோம். தற்போது இந்த காலம் எல்லாம் வெகுவாக மாறிவிட்டது.

ராகுல் காந்தி தேடுவது கடவுளையா? பிரச்சனையா?.. நடிகை கஸ்தூரிக்கு வந்த திடீர் ‛டவுட்’! சுளீர் கேள்விராகுல் காந்தி தேடுவது கடவுளையா? பிரச்சனையா?.. நடிகை கஸ்தூரிக்கு வந்த திடீர் ‛டவுட்’! சுளீர் கேள்வி

உணவு டெலிவரி

உணவு டெலிவரி

வீட்டில் இருந்தபடி நினைத்த ஹோட்டல்களில் பிடித்த உணவுகளை ஆர்டர் போட்டு விடுகிறோம்.. அந்த உணவுகளும் சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்து விடுகிறது. கால் மேல் கால் போட்டுக்கொண்டு பிடித்த ஹோட்டல் உணவுகளை வீட்டில் இருந்தபடியே மக்களும் உணவை ஒரு கை பார்த்து விடுகின்றனர். இதற்காக ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் நுற்றுக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி பெண்

மாற்றுத்திறனாளி பெண்

மழை, வெயில், குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே உணவுகளை கொண்டு வந்து வீட்டில் கொடுத்து விடுகின்றனர். இதனால் புதிதாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. காலை முதல் இரவு வரை சாலைகளில் சர்ரென்று பைக்குகளில் இந்த ஊழியர்கள் சிட்டாக பறப்பதை பெருநகரங்களில் சர்வ சாதரணமாக காண முடியும். அந்த வகையில், தான், ஸ்விக்கி பெண் ஊழியர் ஒருவர் சாலையில் உணவு டெலிவரி செய்ய சென்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி நெட்டிசன்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பெண்ணுக்கு சல்யூட்

பெண்ணுக்கு சல்யூட்

இதற்கு காரணம் மாற்றுத்திறனாளியான அந்த பெண் ஊழியர் வீல் சேரில் உணவு பொருட்களை விநியோகம் செய்ய எடுத்துச்செல்வதே ஆகும். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டில், ''நிச்சயமாக.. வாழ்க்கை கடினமானது. ஆனால் நாம் தோல்வியை ஏற்றுக்கொள்ள கற்கவில்லை. இந்த பெண்ணின் உத்வேகத்திற்கு சல்யூட் செய்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

அயராத உழைப்புக்கு பாராட்டு

அயராத உழைப்புக்கு பாராட்டு

சில வினாடிகள் மட்டும் ஓடும் அந்த வீடியோவில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் ஊழியர் உணவு டெலிவரி செய்யும் பேக்குகளுடன் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்த நெட்டிசன்கள், பலரும் அந்தப் பெண்ணின் அயராத உழைப்பை பாராட்டி மகிழ்ந்தனர். மேலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வேலை வாய்ப்பு டெலிவரி நிறுவனங்களால் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

English summary
A video of a disabled woman delivering food while sitting in a wheel chair is spreading fast on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X