விவசாயிகளுக்கு மகிழ்ச்சி.. ரூ.2,481 கோடி வேளாண்மை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. சூப்பர்
டெல்லி: தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டம், புதுமைத் திட்டம் மற்றும் காகிதக் குறைவான பேனா அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. மேலும், இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்துக்காக ரூ. 2,481 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதுமுள்ள 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது இந்த இயக்கத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல, விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சரவை கூட்டம்: இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.. இதை பற்றி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் சொல்லும்போது, "இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்துக்காக ரூ.2,481 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகளுக்கு இந்த திட்டம் உதவும். தற்போது, நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.3,689 கோடி முதலீட்டில் இரண்டு நீர் மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்பு: நிதி ஆயோக்கின் முதன்மை முயற்சியான அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்திற்கு 2028 மார்ச் 31ம் தேதி வரை நிதிச்செலவாக ரூ.2,750 கோடி ஒதுக்க பட்ஜெட்டில் AIM 2.0 க்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இந்த முன்முயற்சி, ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்கான புதிய திட்டமான "ஒரே நாடு, ஒரே சந்தா" திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடு தழுவிய அளவில் அறிவார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளுக்கான அணுகலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை: 2025, 2026 மற்றும் 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு மொத்தம் சுமார் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 6,000 கோடி செலவில் மதிப்பிடப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளின் சந்தாக்களை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அவற்றை அணுகும் வகையில் இருக்கும்.. இந்த திட்டம் 6,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது.
ஏறக்குறைய 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களாக இடம் பெறுவார்கள். உயர்கல்வித் துறையானது இதற்கான ஒருங்கிணைந்த போர்ட்டலை கொண்டிருக்கும். முக்கியமாக, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உயர்தர ஆதாரங்களை எந்த கட்டணமின்றி வழங்குவதன் மூலம் பெரிதும் பயனடையும்
ரூ.1,435 கோடி: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண்ணை பொது வணிக அடையாளங்காட்டியாக மாற்ற வசதியாக ரூ.1,435 கோடி நிதி ஒதுக்கி நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 78 கோடி பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 98 சதவீதம் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications