2022 ஆம் ஆண்டு வரை சமூக விலகலை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.. அதிர வைக்கும் அமெரிக்க ஆய்வு
டெல்லி: கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதாவது 2022 ஆம் ஆண்டு வரை நாம் சமூக இடைவெளியை கடைப்பிடித்துதான் ஆக வேண்டும் என ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனா எனும் ஆட்கொள்ளி வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இதற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் இந்த நோயிலிருந்து மீள்வதற்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவிட் 19 வைரஸிலிருந்து தப்பிக்க 2022-ஆம் ஆண்டு வரை நாம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

முக்கிய விஷயங்கள்
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை வெளியிட்ட ஆய்வில் கூறுகையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை இல்லாத நிலையில் கான்டாக்ட் டிரேசிங், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை கடைப்பிடித்தால் வைரஸ் தொற்றிலிருந்து தப்பலாம்.

வைரஸ்
சமூக இடைவெளி நடவடிக்கையானது 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தற்போது முதல் 2022 வரை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். கொரோனா பாதித்த ஒருவர் நெகடிவ் என வந்தபிறகு அவர்களுக்கு கொரோனா வருகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் கொரோனா பாதித்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையால் அவர்களுக்கு கொரோனா இல்லை என வந்தது. ஆனால் கடந்த வாரம் அவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கடந்த 2003-ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகும் சில கால இடைவெளிக்கு பின்னர் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

வைரஸ்
எனவே கொரோனா வைரஸும் மீண்டும் வர வாய்ப்புள்ளது. சீனாவிலும் தற்போது 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே 2022 ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என ஆய்வில் தெரிவித்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
