ஹரியானா காங். முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி
டெல்லி: காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் ஹரியானா முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா தற்போது தனது கோட்டையான ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள கார்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் சுமார் 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2009, 2014 மற்றும் 2019 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தொகுதியான ஹூடா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக ஆளும் ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் வேலை செய்தது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டியில் இறங்கின. எனினும் இங்கு பாஜக-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தான் முன்னிலை வகித்து வருகிறது. ஹரியானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வால் கூறும் போது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், அதைத்தொடர்ந்து 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எண்ணப்படும் என்றும் கூறினார். '
அதன்படியே வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில காங்கிரஸ் கட்சி 55 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், இதர கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மாறியது. வாக்கு எந்திரங்களில் எண்ணப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கிய நிலையில், பாஜக முன்னிலை வகிக்க தொடங்கியது. மாலை 4.45 மணி பாஜக 29 இடங்களில் 20 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றி, 8 இடங்களில் முன்னிலை என 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹரியானாவில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபிந்தர் சிங் ஹூடா தற்போது தனது கோட்டையான ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள கார்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் 71465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பூபிந்தர் சிங் ஹூடா மொத்தம் 108539 வாக்குகள் பெபற்றார். பாஜக வேட்பாளர் மஞ்சு 37074 வாக்குகள் மட்டுமே பெற்றார்.












Click it and Unblock the Notifications