“நோ டென்சன்”.. டவர் இன்றி பணம் அனுப்பலாம்! எச்டிஎப்சியின் “சூப்பர் ஆப்” - யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
இணையதள வசதி இல்லாமலேயே பணம் அனுப்பும் வகையிலான புதிய செயலியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்து இருக்கிறது.
டெல்லி: டிஜிட்டல் மூலமாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அனுப்புவதற்கு இணையதள இணைப்பு தேவைப்பட்டு வந்த நிலையில், இணையதள வசதி இல்லாமலேயே பணம் அனுப்பும் வகையிலான புதிய வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது எச்டிஎப்சி வங்கி. இதன் மூலம் செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகளிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என அந்த வங்கி அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கூகுள் பே, பே டிஎம், போன் பே ஆகிய செயலிகளின் வருகைக்கு பிறகு பெரும்பாலான கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்பி வருகிறார்கள்.
பொதுமக்களும் ஏடிஎம் மையங்களுக்கு சென்று காத்திருக்காமல் இந்த செயலிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சாலையோர கடைகள் தொடங்கி வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் பணத்தை செலுத்தி வருகின்றனர்.

நாட்டிலேயே முதல் முறை
ஆனால், செல்போன் சிக்னல் மோசமாக இருக்கும் பகுதிகளில் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் பல்வேறு தர்ம சங்கடங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் வங்கியான எச்டிஎப்சி, இணையதள இணைப்பு வசதி இல்லாமலேயே டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகம் செய்து இருக்கிறது.

செல்போன் சிக்னலே வேண்டாம்
இந்திய ரிசர்வ் வங்கியின் சாண்ட்பாக்ஸ் திட்டத்தின் கீழ், கிரஞ்ச் ஃபிஷ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள எச்டிஎப்சி வங்கி இந்த வசதியை கொண்டு வந்து இருக்கிறது. இதன் மூலம் மோசமான செல்போன் சிக்னல் உள்ள மழைவாழ் பகுதிகள், வனப்பகுதிகள், கிராம பகுதிகள், புற நகரங்களிலும் தங்கள் வங்கியின் ஆஃப்லைன் பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்த முடியும் என்று எச்டிஎப்சி தெரிவிக்கிறது.

ஆஃப்லைன் பண பரிவர்த்தனை
குறிப்பாக அதிகளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள், பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள், அடித்தளங்கள், சுரங்க பாதைகள், பார்க்கிங் பகுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் மொபைல் சிக்னல் டிராஃபிக் காரணமாக இணையதள வேகம் மிகக்குறைவாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் எச்டிஎப்சியின் ஆஃப்லைன் பணவர்த்தனை வசதி பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரிகளும் பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் மட்டுமின்றி வியாபாரியும் இந்த ஆப்லைன் பண பரிவர்த்தனை முறையை மேற்கொள்ள முடியும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்து உள்ளது. வியாபாரியோ அல்லது வாடிக்கையாளரோ மீண்டும் ஆன்லைனுக்கு சென்றபிறகு அந்த பணம் சென்று சேர்ந்துவிடும். அத்துடன் இந்த வசதியை எச்டிஎப்சி வாடிக்கையாளார்கள் மட்டுமின்றி அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களாலும் பயன்படுத்த முடியும்.

4 மாதங்கள் சோதனை ஓட்டம்
இன்விடேசன் லிங் மூலமாக பிற வங்கி வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தலாம் என்று எச்டிஎப்சி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 4 மாதங்கள் இதனை சோதனை ஓட்டமாக எச்டிஎப்சி வங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 16 க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய பரிணாமம்
இந்த சோதனை ஓட்ட காலக்கட்டத்தில் அதிகபட்சமாக ரூ.200 மட்டுமே ஆப்லைன் முறைப்படி அனுப்ப முடியும். எச்டிஎப்சி மற்றும் கிரன்ச்பிஷ் இணைந்து உருவாக்கி உள்ள இந்த செயலிக்கு ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டில் அனுமதி கொடுத்து இருக்கிறது. இந்த சோதனை ஒட்டம் வெற்றியடைந்தால் டிஜிட்டல் பணபரிவர்த்தனையின் அடுத்த பரிணாமத்தை இந்தியா அடையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications