'பண்டிகை காலத்தில் அதீத எச்சரிக்கை தேவை.. வேக்சின் போட்டாலும் மாஸ்க் கட்டாயம்..' மத்திய சுகாதார துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதால், வரும் பண்டிகை காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி கொரோனா 4 லட்சம் வரை சென்றது.

பல வாரங்கள் வரை நீட்டித்த கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம் கேரளாவில் மட்டும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அடுத்து வரும் மாதங்கள் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஏனென்றால் கேரளாவில் முதல் பக்ரீத் பண்டடிக்கையின் போது வைரஸ் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, ஓணம் பண்டிகைக்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியாவின் தினசரி பாதிப்பும் கடந்த 63 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் இன்று மொத்தம் 48,786 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

வேக்சின் பணிகள்

வேக்சின் பணிகள்

இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ரஜேஷ் பூஷன்செய்தியாளர்களிடம கொரோனா பாதிப்பு குறித்தும் வேக்சின் பணிகள் குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நாடு முழுவதும் உள்ள 16% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளதாகவும் 54% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் மட்டும் 18.38 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தினசரி சராசரியாக 59.29 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைசி வாரம் மட்டும் தினசரி 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்துப் பேசிய அவர், "நாட்டில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முடியவில்லை. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். கடந்த ஜூன் மாதம் 279 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100ஐ கடந்திருந்தது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் இறுதியில் 42ஆகக் குறைந்துள்ளது. நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5-10% வரை உள்ளது. குறிப்பாகக் கேரளாவில் இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ளது. இதர மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் 10,000 குறைவாகவே உள்ளது" என்றார்.

100% வேக்சின்

100% வேக்சின்

சிக்கிம், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 18+ அனைவருக்கும் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், வேக்சின் போட்டிருந்தாலும் பொது இடங்களில் மாஸ்க்குகளை தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் அதேபோல நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதால் 2ஆம் டோஸை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் விரைவாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

தொடர்ந்து பண்டிகை காலம் குறித்துப் பேசிய அவர், "நாம் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடையவில்லை. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் வீடுகளில் இருந்தே நாம் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க வேண்டும். அதைத் தாண்டி கட்டாயம் ஒன்றுகூட வேண்டும் என்றால், அனைவரும் 2 டோஸ் வேக்சின் போட்டிருக்க வேண்டும்" என்றார்.

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா குறித்துப் பேசிய ரஜேஷ் பூஷன், "C.1.2 உருமாறிய கொரோனா அதிகம் இருக்கும் இங்கிலாந்து, ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு தவிர, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், போட்சுவானா, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கும் RTPCR நெகடிவ் முடிவுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இந்தியா வந்ததும் மற்றொரு முறை சோதனை செய்யப்படுகிறார்கள். அதேபோல டெல்டா பிளஸ் பாதிப்பு இதுவரை நாட்டில் 300 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அனைத்து வேக்சின்களும் உருமாறிய கொரோனவை நல்ல முறையில் கட்டுப்படுத்துகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+