5 ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: வரும் 2024-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் மிக முக்கிய அறிவிப்பாக அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வாட்டி வரும் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் நீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். நாட்டின் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதும், அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கவே ஜல சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது பொறுப்பேற்றுள்ள அரசானது நீர் வழங்கல் மற்றும் நீர் மேலாண்மையில் அனைத்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி எடுக்கும் என்றார். இதனால் அனைத்து வீடுகளுக்கும் தண்ணிர் வசதி தருவதை உறுதி செய்ய முடியும் என்றார்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு முக்கிய படியாக ஜல் சக்தி அமைச்சகத்தின் அரசியலமைப்பு உள்ளதாக குறிப்பிட்டார். எனவே வரும் 5 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
மேலும் விரைவில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்குமே, சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படும் இதற்காக ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications