இந்தியாவில் வெப்ப அலை..பல மாநிலங்களை தாக்கும்..இந்திய வானிலை ஆய்வு மையம் வார்னிங்
இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் இம்மாத இறுதியில் வெப்ப அலை தாக்கம் தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கடந்த 1901ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகபட்சமாக 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டு 29.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த மூன்று மாதம் இயல்பைவிட அதிக வெப்ப அலை நாடு முழுவதும் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மார்ச் 1-ஆம் தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் சுகாதாரத் துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் மெய்யநாதன். அப்போது, 'சுனாமியை சந்தித்திருக்கிறோம், புயலை சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த முறை நாம் வெப்ப அலையை எதிர்கொள்ள இருக்கிறோம் என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமான தமிழ்நாட்டில், திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல், பல்லுயிர்களை பாதுகாப்பதும் முக்கியம்.வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்றும் கூறினார்.
இந்த சூழ்நிலையில்தான் நாடு முழுவதும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை கடுமையாக இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் இம்மாத இறுதியில் வெப்ப அலை தாக்கம் தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications