அடங்கேப்பா! சிபிஐ ரெய்டில் ஹெலிகாப்டர் பறிமுதல்.. ரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் அதிரடி
டெல்லி: சுமார் ரூ 34 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அவினாஷ் போன்சேலுக்கு சொந்தமான இடத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி மோசடி ஒன்றாக டிஎச்எஃப்எல் மோசடி கருதப்படுகிறது. திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மோசடி என்று அழைக்கப்படும் இதில் ரூ 34,614 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அவினாஷ் போன்சேல். புனேவில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஹெலிகாப்டர்
அப்போது அங்குக் கைப்பற்றப்பட்ட விஷயம் சிபிஐ அதிகாரிகளைச் சற்று மிரளச் செய்துவிட்டது. மோசடி தொழிலதிபரான அவினாஷ் போன்சேலுக்கு சொந்தமான வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை பறிமுதல் செய்தது. போன்சேலுக்கு சொந்தமான இடத்தில் இந்த ஹெலிகாப்டரை அதிகாரிகள் கைப்பற்றினர். வங்கி மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அவினாஷ் இதை சமீபத்தில் தான் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓவியங்கள்
இதே டிஎச்எஃப்எல் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ரெய்டில் இந்திய மேஸ்ட்ரோக்கள் எஃப்என் சௌசா மற்றும் எஸ்எச் ராசா ஆகியோரின் ஓவியங்கள் கைப்பற்றியது. இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.5.50 கோடி ஆகும். அந்தச் சோதனையின் போது, 1956ஆம் ஆண்டு எஸ்.எச்.ராசாவின் 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 'வில்லேஜ்' என்ற கேன்வாஸ் ஓவியம் மற்றும் எஃப்.என்.சௌசாவின் ரூ.2 கோடி மதிப்பிலான கேன்வாஸ் ஓவியத்தை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.

வாட்சுகள்
மேலும், ஜேக்கப் அண்ட் கோ மற்றும் ஃபிராங்க் முல்லர் ஜெனிவ் நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சொகுசு வாட்சுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். டிஎச்எஃப்எல் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக இயக்குநர் கபில் வாத்வான், அப்போதைய இயக்குநர் தீரஜ் வாத்வான், தொழிலதிபர் சுதாகர் ஷெட்டி உள்ளிட்டோர் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகளிடம் மோசடியாத கடன் பெற்றனர்.

மோசடி
போலியான விவகாரங்களைக் கொடுத்து டிஎச்எஃப்எல் நிறுவனத்தின் பெயரில் போலியாகக் கடனை பெற்று உள்ளனர். இதனால் வங்கிகளுக்கு சுமார் ரூ 34 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும், கடனாக பெறப்பட்ட தொகையைக் கொண்டு அவினாஷ் போன்சேல் லண்டனில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதும் சிபிஐ எஃப்ஐஆரில் தெரிய வந்துள்ளது












Click it and Unblock the Notifications