கிரகணத்தின் போது நிலவை பாம்பு விழுங்குமா? உணவு சாப்பிடலாமா? 3 முக்கிய கட்டுக்கதைகள் என்ன?
டெல்லி: சூரிய கிரகணத்தின் போது உணவு குறித்து கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. அவை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும்.

இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள். சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன. இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே இன்று நடைபெறுகிறது.
இந்த கிரகணங்களின் போது விஞ்ஞான ரீதியில் நிறைய விஷயங்கள் சொல்லப்படும். அதில் ஒன்று சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் ரெடினாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வையே பறி போகும் பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சூரிய கிரகணத்தின் போது சில கட்டுக்கதைகளும் கட்டவிழ்க்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது. சந்திர கிரகணம் என்றால் சந்திரனை பாம்பு விழுங்குவது என கட்டுக்கதைகளை கூறுவதை நாம் சிறு வயதில் கேட்டிருக்கிறோம். அதன் பின்னர்தான் பூமியின் நிழலில் சந்திரன் செல்வதால் அது சந்திர கிரகணம் என்றும் சூரியனை சந்திரன் மறைப்பதால் ஏற்படுவது சூரிய கிரகணம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்று உணவு தொடர்பாக 3 கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.
கட்டுக்கதை1: சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது
கிரகணத்தின் போது சாப்பிட்டால் எதிர்மறை சக்திகளால் நாம் சாப்பிடும் உணவு கெட்டு போகக் கூடும். இதனால் உடலில் அஜீரண கோளாறுகள் ஏற்படும் என்பது நமது நம்பிக்கை. ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்னவெனில், கிரகணத்தின் போது நிறைய, கடின உணவுகளை சாப்பிடுவதற்கு பதில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள்.
கட்டுக்கதை 2: கிரகணங்கள் முடிந்த பிறகு மீதமுள்ள உணவை தூக்கி எறிய வேண்டும்.
கிரகணங்கள் முடிந்ததும் நிறைய பேர் மீதமுள்ள உணவை தூக்கி எறிந்து விடுகிறார்கள். கிரகணத்தால் அந்த உணவு கெட்டு போயிருக்குமோ என்பதால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், கிரகணத்தின் போது ஏற்படும் கதிர் வீச்சால் உணவு பொருள் கெட்டு போய்விடும் என்றால் மளிகைக் கடைகளில் உள்ள மளிகை பொருட்களும், வயல்களில் உள்ள பயிர்களும் கெட்டு போக வேண்டும் அல்லவா. ஆனால் அப்படி நடப்பதில்லை. எனவே கிரகணத்தின் போது ஏதோ ஒரு காரணத்தால் உணவு கெட்டு போய்விடுவதால் அதற்கு கிரகணத்தின் மீது குற்றம்சாட்டக் கூடாது என்றனர். கிரகணத்தின் போது உணவு கெட்டுவிடும் என்பதற்கான எந்த விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
கட்டுக்கதை 3: உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது
கிரகணத்தின் போது உணவு உள்கொள்வதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் மறுக்கிறார்கள். கிரகணத்தின் போது உணவை உட்கொண்டு விட்டு நீராகாரங்களை குடித்துவிட்டு தியானத்திலோ அல்லது ரிலாக்ஸாகவோ இருத்தல் வேண்டும் என்கிறார்கள்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications