10 இடங்களில் பாஜகவுக்கு உதவிய காங்.. 2வது முறையாக டக் அவுட் ஆகியும் கொண்டாடியதன் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Delhi Assembly Election Result| டெல்லியில் பாஜக வீழ்ந்தது இப்படித்தான்!

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியை நினைத்து காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் மனம் வருந்துவர் என நினைத்த நிலையில் அவர்களோ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ டக் அவுட் ஆனது.

    கடந்த முறை ஆம் ஆத்மி 67 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

    காங்கிரஸ் முனைப்பு

    காங்கிரஸ் முனைப்பு

    இந்த அவமானத்தை துடைக்க இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் முனைப்பு காட்டியதா என்றால் இல்லை. ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெற வைக்க களத்தில் இறங்கி தீவிரமாக வேலை செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொண்டனர். அத்துடன் எக்சிட் போலில் ஆம் ஆத்மி கட்சியே வெல்லும் என கூறியதையும் அவர்கள் முன்னரே தெரியும் என்றனர்.

    கமல்நாத்

    கமல்நாத்

    இந்த நிலையில் தேசிய கட்சி என கூறிக் கொண்டு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரு முறை டெல்லி சட்டசபை தேர்தலில் டக் அவுட் ஆனதை நினைத்து காங்கிரஸ் தலைவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்களோ ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியையும் முக்கியமாக பாஜகவின் தோல்வியையும் கொண்டாடியுள்ளனர். அவ்வாறு கொண்டாடியவர்களில் ப சிதம்பரமும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் அடங்குவர்.

    வெற்றி

    வெற்றி

    இதற்கு அவர்களிடம் நல்ல, நியாயமான காரணங்கள் உள்ளன. ஷீலா தீட்சித்தின் பெயரை குறிப்பிட்டதை போல் களத்தில் இறங்கி தீவிரமாக வேலை செய்திருந்தால் வாக்குகள் சிதறியிருக்கும் என்பதே இவர்களின் கருத்து. வாக்குகள் சிதறினால் அது பாஜகவின் வெற்றிக்கு வழி வகுக்கும். தாங்கள் வெற்றி பெறுவதை காட்டிலும் பாஜக இரு இலக்க தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எனினும் 2015-ஆம் ஆண்டு பாஜக பெற்ற வெற்றியை இப்போது இந்த தேர்தலில் இரட்டிப்பாக்கியதும் காங்கிரஸ்தான் என்றால் நம்ப முடிகிறதா!

    டெபாசிட்

    டெபாசிட்

    காந்தி நகர், லட்சுமி நகர், கிருஷ்ணா நகர், பிஜ்வாசன், ஆதர்ஷ் நகர், சட்டார்பூர், கஸ்தூர்பா நகர், பட்பர்கஞ்ச், ஷாதாரா, பாத்லி ஆகிய 10 தொகுதிகளில் வெற்றி பெற்றோரின் வாக்குகளுக்கும் தோல்வி அடைந்த பாஜகவின் வாக்குகளுக்கும் நூலிழை மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். எனவே ஆம் ஆத்மி வெற்றிக்கும், பாஜகவின் கூடுதல் தொகுதி வெற்றிக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என சொல்லப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+