Flashback 2021: ட்விட்டர் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமனம்.. Tech உலகை ஆளும் இந்தியர்கள்
டெல்லி: டிவிட்டர் தலைமை நிர்வாக இயக்குநராக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டதை அடுத்து முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியர்கள் ஆளுவதாக பெருமிதம் கொள்ள வைத்தது இந்த நியமனம்!
Recommended Video
அதிலும் இந்தியரான பராக் அக்ரவாலின் திறமையை பார்த்து ஏற்கெனவே சிஇஓவாக இருந்த ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்ததையும் நினைத்து இந்தியர்கள் நெகிழ்ந்து வருகிறார்கள்.
பிரபல சமூகவலைதள நிறுவனமான ட்விட்டரின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த ஜாக் டோர்சி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக ட்விட்டரின் புதிய சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

மும்பை ஐஐடி
இவர் மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பயின்றவர். இவர் அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கேயே குடியுரிமை பெற்றார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ ஆகியவற்றிலும் பணியாற்றிவிட்டு 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

இந்தியர்கள்
ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாரயேன், விஎம்வேரின் சிஇஓ ரகு ரகுராம் ஆகியோர் இந்தியர்களாவர்.

இந்தியர்களின் திறமை
இந்தியர்களின் திறமைகளை அமெரிக்கா பெரிதும் பயன்படுத்தி வருவதாக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இப்படியாக இந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ நியமனம் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்காவிலும் இந்தியர்
அது போல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் அதிகாரம் மிகுந்த பணிகளின் ஒன்றான அமெரிக்க அதிபருக்கான அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவன் என்ற இந்தியரை அமெரிக்க அதிபர் ஜோபிடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications