ஹிஜாப் தடை.. மாணவி முஸ்கானுக்கு திடீரென அல்கொய்தா தலைவர் ஆதரவு தந்தது ஏன்? பின்னணி காரணம் இதுவா?
டெல்லி: கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டம் குறித்து அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி திடீரென வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அல் சவாஹிரியின் இந்த வீடியோவிற்கு பின் என்ன நடந்தது என்ற உளவு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
Recommended Video
கர்நாடகாவில் மாண்டியாவில் உள்ள அரசு பியு கல்லூரியில் படிக்கும் பிபி முஸ்கான் கான் கல்லூரிக்கு சென்ற போது ஹிஜாப் போராட்டம் காரணமாக இந்துத்துவா மாணவர்கள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டார். இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் சென்று கோஷம் எழுப்ப பிபி முஸ்கான் கான் அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பினார்.
இந்த நிலையில் முஸ்கானை பாராட்டி அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

வீடியோ
நேற்று முதல்நாள் இவர் வெளியிட்ட 9 நிமிட வீடியோவில் முஸ்கானை பாராட்டி இருந்தார். அதில், இந்துத்துவா கும்பலை முஸ்கான் தைரியமாக எதிர்கொண்டு இருக்கிறார். ஜிஹாத்தின் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் எங்கள் மதத்திற்கான, விடுதலைக்கான கோஷத்தை எழுப்பி உள்ளார். இஸ்லாமிய மக்களை முஸ்கான் தட்டி எழுப்பி இருக்கிறார். முஸ்கான் ஒரு புனிதமான பெண், என்று பாராட்டி இருந்தார்.

அல்கொய்தா
இந்த நிலையில் அல்கொய்தா தலைவர் இப்படி திடீரென பேசியதற்கு காரணம், இந்தியாவில் அல்கொய்தா அமைப்பிற்கான ஆதரவை பெற அவர் முயற்சிப்பதே என்று உளவு அமைப்பு தகவல்கள் தெரிவித்ததாக CNN-News18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு முன்பெல்லாம் அல்கொய்தா அமைப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசும்.

ஹிஜாப்
இப்போது இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆதரவை பெற விரும்பி அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களை மையப்படுத்தி பேசுகிறார்கள். அப்படித்தான் இதில் ஹிஜாப் விஷயம் பற்றி பேசி இருக்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அல்கொய்தா அமைப்பின் தலைவர் பல காலங்களுக்கு பிறகு வெளியிட்ட வீடியோ. அல்கொய்தா அமைப்பு மூலமும் நீண்ட காலத்திற்கு பின் வெளியிடப்பட்ட வீடியோ இது . அல்கொய்தா தலைவரான இவர் பலியாகிவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில்தான் அந்த வீடியோ வெளியாகி உள்ளது,

என்ன காரணம்
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை தூண்டி விடும் விதமாக இந்த வீடியோ வெளியிட்டு இருப்பதால் இந்தியாவின் உளவு தகவல்கள் தெரிவித்ததாக CNN-News18 செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. காஷ்மீரிலும் நடக்கும் சில ஹிஜாப் போராட்டங்களுக்கு பின் தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என்று உளவு தகவல்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி
ஆனால் அல்கொய்தா தலைவருக்கு இதனால் இந்தியாவில் பெரிய ஆதரவுகள் கிடைக்காது. இதை வைத்து சில தீவிர மதவாத அமைப்புகள் வேண்டுமானால் தங்களுக்கு ஆதரவு கிடைத்ததாக நினைக்கும். அல்கொய்தா அமைப்பினருக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை. உலகிற்கு தான் உயிருடன் இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகவும். மீண்டும் தனக்கான ஆதரவை பெற வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு சென்சிட்டிவ் விஷயம் பற்றி அவர் பேசியுள்ளார் என்று உளவு தகவல்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications