ப்பா அடி மேல் அடி.. 4 நாளில் எல்லாம் போச்சு.. புதிய பங்கு விற்பனையை கைவிட்ட அதானி என்டர்ப்ரைஸ்!
மார்க்கெட் என்பது மோசமான நிலையில் உள்ளது. எங்களின் பங்கு மதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மோசமான சூழ்நிலை காணப்படுகிறது. இப்போது பங்குகளை விற்பது சரியாக இருக்காது என்று அதானி தெரிவித்துள்ளார்
டெல்லி: அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்ப்ரைஸ் நிறுவனம் பங்குசந்தையில் புதிய பங்குகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. 20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக அந்த நிறுவனம் வெளியிட இருந்த பங்குகளை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய பங்குகள் மீது ஏற்கனவே முதலீடு செய்ய ஆர்வம் காட்டி பங்குகளுக்கு பணம் கொடுத்து இருந்த நிறுவனங்கள், மக்களுக்கு அந்த பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பங்கு சந்தை மிகவும் கடுமையான, ஆபத்தான நிலையில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களை வைத்து உள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக சரிந்து வருகின்றன.

அதானி நிறுவனம்
அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது. தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது.

ஹிண்டர்ன்பர்க்
இந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 31 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு குழுமத்தின் பங்கு 4 நாட்களில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்ததே இல்லை. அதிலும் நேற்று அதானி குழுமத்தின் பங்குகள் எல்லாம் மிக மோசமாக சார்ந்துள்ளன. கடந்த 4 நாட்களில் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவிகிதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அடையும் வரை அவர் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைவிட்டது
இந்த நிலையில்தான் அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்ப்ரைஸ் நிறுவனம் பங்குசந்தையில் புதிய பங்குகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. 20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக அந்த நிறுவனம் வெளியிட இருந்த பங்குகளை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மார்க்கெட் என்பது மோசமான நிலையில் உள்ளது. எங்களின் பங்கு மதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மோசமான சூழ்நிலை காணப்படுகிறது. இப்போது பங்குகளை விற்பது சரியாக இருக்காது.

பங்கு
இந்த நேரம் பங்குகளை விற்பது தர்மப்படி சரியாக இருக்காது. அதனால் பங்குகளை விற்கும் முடிவை கைவிடுகிறோம். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி நஷ்டம் அடைவதை நாங்கள் விரும்பவில்லை என்று அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குழுமத்தின் அதானி என்டர்ப்ரைஸ் பங்குகள் 20000 கோடியை ஒரு பங்கு 1 ரூபாய் என்ற விலைக்கு அதானி என்டர்ப்ரைஸ் நிறுவனம் விற்க முன் வந்தது. ஆனால் இதை வாங்க பெரிதாக சில்லறை வர்த்தக நிறுவனங்கள் விரும்பவில்லை. சில பெரு நிறுவனங்கள் மட்டுமே இதை வாங்க ஒப்புக்கொண்டன. இந்த நிலையில்தான் அதானி என்டர்ப்ரைஸ் பங்குகள் நேற்று 28 சதவிகிதம் சரிந்தன. அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்ப்ரைஸ் நிறுவனம் பங்குசந்தையில் புதிய பங்குகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications