ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தி பேசத் தொடங்குங்கள்.. அமித் ஷா அதிரடி பேச்சு
டெல்லி: ‛‛இந்தியாவில் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
Recommended Video
மத்திய அரசின் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ச்சியாக தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு துவக்கம் முதலே தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் இன்னும் மாறவில்லை.
சமீபத்தில் மும்மொழி கல்வி கொள்கையையும் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுவும் ஒருவகை இந்தி திணிப்பு தான் என திமுக கூறிய நிலையில் தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கை தான் பின்பற்றப்படும் என அதிமுக அரசு கூறியது. இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

அலுவல் மொழிக்கமிட்டி கூட்டம்
இந்நிலையில் தான் டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது கமிட்டியின் 11வது ‛வால்யூம்' ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

70 சதவீதம் இந்தி
பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை எளிமையாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில்...
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் 22,00க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை ஹிந்திக்கு மாற்றியுள்ன. அங்குள்ள 8 மாநிலங்களும் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க ஒப்புக்கொண்டன.

ஆங்கிலத்துக்கு மாற்றாக
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, நிசித் பிராமானிக் உள்பட கமிட்டி உறுப்பினர்கள் இருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications