இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது.. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பரபர கருத்து!
இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது, பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது, என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது, பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது, என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மிகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம், காஷ்மீரை இரண்டாக பிரித்தது என்று வேகமாக செயல்பட்டு வருகிறது.
அதன்பின் சிஏஏ சட்டம் கொண்டு வந்தது. இதனால் பாஜகவின் இந்து ராஷ்டிரா கனவு விரைவில் நிறைவேறும் என்று பாஜகவினர் பலரும் கூறி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இதற்கு பின் இருக்கிறது. ஆர்எஸ்எஸ்தான் பாஜகவின் மூளை என்றும் கூறப்படுகிறது.

என்ன சொன்னார்
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது. பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது. இரண்டும் ஒன்று கிடையாது. பாஜகவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு.

மக்கள் எப்படி
மக்கள் பாஜகவிற்கு எதிராக போராடினால் அதை இந்துக்களுக்கு எதிரான போராட்டம் என்று திரிக்க கூடாது. இரண்டும் வேறு வேறு வகையிலான போராட்டங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலையும் மதத்தையும் ஒன்றாக வைத்து பார்க்க கூடாது. சிஏஏவை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு அதைத்தான் சொல்கிறது.

மத்திய அரசு
மாநில அரசு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. இதனால் கேரளா போன்ற மாநில அரசுகள் மத்திய அரசின் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்தியாவில் பணியாற்ற விரும்பும் மக்கள், இந்து மதத்திற்கு உழைக்க வேண்டும். இந்து மதம் முன்னேற வேண்டும் என்று உழைக்க வேண்டும். அதுதான் உண்மையான உழைப்பு.

இந்தியா எப்படி
இந்தியா சூப்பர் பவர் நாடாக வேண்டும் என்பது முக்கியம் இல்லை. இந்தியா நல்ல நாடாக மாற வேண்டும் என்பதே முக்கியம். இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை. இந்து மதம் இல்லாமல் இந்தியா இல்லை. மக்கள் இதை மனதில் கொண்டு, அதற்கு ஏற்றபடி பணியாற்ற வேண்டும். என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications