அடுத்தடுத்து 7 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கனடாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா
டெல்லி: ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த விமானங்கள் அவசர அவசரமாக பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக கனடாவில் தரையிறக்கபட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
அண்மைக்காலமாகவே பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் என மக்கள் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. போலியாக இது போன்று விடுக்கப்படும் மிரட்டல்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்படுகிறது. இதனிடையே, ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. எக்ஸ் தளம் வாயிலாக இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானங்கள் அவசர அவசரமாக திருப்பி விடப்பட்டு அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. 48 மணி நேரத்திற்குள் 10 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இப்படி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டெல்லி - சிகாகோ விமானம், டாமன் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்யா - பெங்களூர் எர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்கா - மும்பை இடையே இயக்கப்படும் ஆகாஷா ஏர் விமானம், பகதோஹ்ரா டூ பெங்களூர் விமானம், அமிர்தசரசில் இருந்து டேராடூன் மற்றும் டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், மதுரை டூ சிங்கப்பூர் சென்ற விமானங்கள் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
முன்னதாக நேற்று முன் தினம், இரண்டு இண்டிகோ விமானம் மற்றும் ஒரு ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானங்கள் அவசரமாக பல்வேறு ஏர்போர்ட்களிலும் தரையிறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளி என தெரியவந்தது.
டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு சென்ற விமானம் கனடாவில் உள்ள இகாலியூட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேற்கு வங்க மாநிலம் பக்டோக்ராவில் இருந்து பெங்களூர்க்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் வெடிகுண்டு மிரட்டல் வந்த விமானங்களில் அடங்கும். அந்த விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக விமான பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications