வீட்டு லோன் வேணுமா? வாடகை வீட்டில் வசிப்போருக்கு வந்தது ஜாக்பாட்.. வீட்டுக்கடன் வட்டியில் அதிரடி
டெல்லி: வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. புதிதாக வீடு கட்டுவதற்கு கடன் தேவையா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு ஒன்றுவெளியாகி உள்ளது.. என்னன்னு பாருங்க.
பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது.. அதில் ஒன்றுதான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்..

அதாவது, கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சாராம்சமாகும்.. அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.
மானிய உதவி: கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தையே அடியோடு மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக, மத்திய அரசு உத்தரவாதம் தந்து, இந்த திட்டத்தினை துவங்கியது. இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது..
இதில், வருமானத்திற்கு ஏற்ப மானியத்தின் அளவு மாறுபடுகிறது.. அதேபோல,கடனை திருப்பி செலுத்தவும் 20 வருடங்களுக்கு அவகாசம் தரப்படுகிறது.. வட்டி விகிதமும் ரொம்பவும் குறைவு...
கடன் வட்டி: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் பெறப்படுகிறது. மேலும், சாதாரண வங்கிகளில் இருந்து கிடைக்கும் வீட்டுக் கடனை விட, கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.
இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. நகர்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்கும் வகையில், கடன் மானியம் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த போகிறதாம்.. அதாவது, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கீகாரம்: கடந்த சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசும்போது, "நடுத்தர மக்கள் தங்களுக்கென்று சொந்த வீடு வாங்கும் கனவைக் கொண்டிருக்கின்றனர். நகர்ப்புறங்களில் பல ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் வாடகை வீட்டில், குடிசைப்பகுதிகளில், அங்கீகாரமற்ற இடங்களில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களும் சொந்த வீடு வாங்கும் வகையில், புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
சொந்த வீடு வாங்க விரும்பும் மக்களுக்கு மத்திய அரசு கடன் மானியம் வழங்கி உதவும். இதனால், அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடி: பிரதமர் சொன்ன இந்த திட்டத்தைதான், மத்திய அரசு அமல்படுத்த போகிறதாம்.. அதுவும், இந்த மாதமே அறிமுகப்படுத்தப் போகிறதாம்.. குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வீட்டு வசதி வழங்கும் நோக்கில் மத்திய அரசு 2015-ம் ஆண்டு ஆவாஸ் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்த நிலையில், இப்போது, மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் திட்டம், ஆவாஸ் யோஜனா திட்டத்தின் விரிவாக்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த திட்டத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாதமே தொடங்கப்படும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.. எனவே, பொதுமக்களுக்கு இந்த பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications