உள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்
டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்தியாவில் இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாட்டிலுள்ள முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களும் விரைவில் தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் பகுதியிலுள்ள மெதந்தா மருத்துவமனையில் அவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். முன்னதாக, இன்று காலை டெல்லியுள்ள எய்மஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
56 வயதாகும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு வார சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பினார். இருப்பினும், அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications