உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும்: அமித்ஷா
Recommended Video
டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இத்தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்று அமைதி காக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ராஜ்நாத்சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சமூக கட்டமைப்பை இத்தீர்ப்பு வலிமைப்படுத்தும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.
நிதிஷ்குமார், கெஜ்ரிவால்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்கவேண்டும். இதில் சர்ச்சை வேண்டாம் என கூறியுள்ளார். இதே போல் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications