மின்னல் வேகத்தில் வைரஸ் பரவல்.. மருத்துவமனைகளில் இடமில்லை.. கொரோனா வார்டுகளாக மாறும் விடுதிகள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்திலுள்ள விடுதிகள், விருந்து அரங்குகளை கொரோனா வார்டுகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. முதல்முறையாக நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு சுமார் 17ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கொரோனா பாதிப்பு
நேற்று மட்டும் தலைநகர் டெல்லியில் 1.08 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் கொரோனா பாசிட்டிவ் விகதம் 15.92%ஆக உள்ளது. தலைநகரில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் இந்தளவுக்கு அதிகரித்தது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, கடந்த நவம்பர் 15ஆம் தேதி, அங்கு கொரோனா பாசிடிவ் விகிதம் 15.33% ஆக இருந்தது.

படுக்கைகள் இல்லை
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி எய்மஸ் மூத்த மருத்துவர் கூறுகையில், மாநிலத்திலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் காலியாக இல்லை. தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பாதிப்பு குறைவதாகத் தெரியவில்லை. இதனால் அரசு உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

நட்சத்திர விடுதிகள்
தலைநகர் டெல்லியில் தற்போது 50,736 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 24,155 பேர் தங்கள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விடுதிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக சுமார் மூவாயிரம் பேருக்குச் சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச கட்டணம்
டெல்லியிலுள்ள பெரும்பாலான நட்சத்திர விடுதிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. கிரவுன் பிளாசா ஐ.டி.சி வெல்கம், ராடிசன் ப்ளூ, சூர்யா விடுதி ஆகியவை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், நட்சத்திர விடுதிகளுக்கான அதிகபட்ச கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நட்சத்திர விடுதிகளில் ரூ.5000, 3 நட்சத்திர விடுதிகளில் ரூ.3000 வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, விளையாட்டு அரங்கம்
இதுதவிர டெல்லியிலுள்ள பெரிய அரங்குகள், ஒரு பள்ளி மற்றும் யமுனா விளையாட்டு அரங்கம் ஆகியவை தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1,100 கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications