டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் கொரோனா படுத்தும்பாடு.. சென்னை உள்பட 8 நகரங்களில் புதிய வீடு வாங்க ஆளில்லை.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றால் இந்தியாவில் 8 முக்கிய முன்னணி நகரங்களில் வீடுகள் விற்பனை 52 சதவீதமாக சரிந்துள்ளதால் ரியல் எஸ்டேட், வீடு விற்பனை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வந்தாலும் வந்தது, மக்களின் வாழ்வாதாரத்தை அப்படியே புரட்டி போட்டுவிட்டது. பொருளாதாரத்தையே முடக்கிவிட்டது. இதனால் உலக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போது கொரோனா லாக்டவுனில் தளர்வுகள் அளித்துள்ள நிலையில் வீட்டு விற்பனை மந்தகதியில் இருப்பதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு- 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா இந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு- 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா

புள்ளி விவரங்கள்

புள்ளி விவரங்கள்

இந்த காலாண்டுக்கான விற்பனையை கடந்த 2019-ஆம் ஆண்டு காலாண்டுடன் ஒப்பிட்டு புள்ளி விவரங்கள் வந்துள்ளன. அதன்படி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை படுமந்தமாக உள்ளது. ஏப்ரல் மாதம் 2019 ஆம் ஆண்டு புதிய வீடுகள் விற்பனையாயின. ஆனால் இந்த முறை புது வீடுகளை வாங்க ஆள் இல்லை என கட்டட ஒப்பந்ததாரர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் கவலை தெரிவித்தனர்.

வீடு வாங்க ஆளில்லை

வீடு வாங்க ஆளில்லை

கடந்த காலாண்டில் இந்த நேரத்தில் பொதுவாக 5 முதல் 6 வீடுகள் விற்பனையாகிவிடும். ஆனால் இந்த முறை வீடு வாங்குவோரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே லோன் போட்டு வீடு வாங்கியோரும் மாத தவணை செலுத்த முடியாததால் வீடுகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் 25 சதவீதத்திற்கு மேல் தள்ளுபடி விலையில் வீடுகளை விற்க தயாராகியுள்ளனர்.

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலை

இதற்கு முக்கிய காரணம் வேலையின்மை மற்றும் பொருளாதார மந்தநிலையே ஆகும். இந்த கொரோனாவால் 2.1 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் பாதியில் வீடு விற்பனை 52 சதவீதம் சரிந்துள்ளது. இது மேலும் சரிய வாய்ப்புள்ளதாம். குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், நவி மும்பை, தாணே, அகமதாபாத் ஆகிய 8 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 65 சதவீதம் குறைந்துவிட்டது.

வீடு ஒப்படைப்பு

வீடு ஒப்படைப்பு

கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு இறுதியில் 4.66 லட்சம் வீடுகள் ஓனர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் ஏஜென்சிகள். 2021ஆம் ஆண்டு மேற்கண்ட நகரங்களில் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அனைத்தும் தாமதமாகிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளார்கள். இவை அனைத்தும் கொரோனாவால் நடந்தது. பொருளாதாரம் மீண்டால் மட்டுமே வீட்டு விற்பனை துறை நல்ல நிலையை எட்டும் என்கிறார்கள்.

English summary
Housing sales hit in top 8 cities during this Coronavirus Pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X