60 முறை குத்தி கொலை! உயிரிழந்த இளைஞனை மீது வெறியாட்டம் போட்ட மைனர் சிறுவன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 18 வயதான இளைஞனைக் கொலை செய்த மைனர் சிறுவன் அதன் பிறகு செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
நமது நாட்டில் அரங்கேறும் சில குற்றச் சம்பவங்கள் மிக மிக மோசமான ஒன்றாக இருக்கும். அப்படிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறிய ஒரு கொலை சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.

அதிலும் கொலை செய்த பிறகு மைனர் சிறுவன் அங்கே செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நூறு ரூபாய்க்காக அந்த சிறுவன் இந்த கொடூரத்தை அரங்கேறியுள்ளான்.
கொடூரம்: தலைநகர் டெல்லியில் 18 வயது இளைஞன் ஒருவன் பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டான். மைனர் சிறுவன் ஒருவன் தான் இந்த கொடூர கொலையைச் செய்துள்ளார். இந்த கொடூரத்தைச் செய்த அந்த சிறுவன், சடலத்திற்கு அருகிலேயே டான்ஸ் ஆடியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வெறும் 350 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 18 வயது இளைஞனைச் சரமாரியாகக் கத்தியால் குத்தும் இளைஞர், ஒரு கட்டத்தில் சடலத்தின் மீது நின்று நடனமாடுவதும் தெரிகிறது.
60 முறை குத்தி கொலை: சுமார் 60 முறை குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணத்தைக் கொள்ளையடிக்கவே இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. அந்த 18 வயது இளைஞனின் கழுத்தை முதலில் நெரித்த மைனர் சிறுவன், அந்த இளைஞனைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது என்ற போலீசார், கொள்ளையடிக்கவே அந்த இளைஞனை இந்த மைனர் சிறுவன் கொடூரமாகக் கொன்றதாகத் தெரிவித்தனர்.
அந்த குறுகிய பாதையில் இருந்து இளைஞனின் உடலை இழுத்து வருவதும் அந்த சிசிடிவி வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. கழுத்தை நெரித்ததில் இளைஞர் உயிரிழந்ததை உறுதி செய்த அந்த மைனர் சிறுவன், அதன் பிறகும் விடாமல் பலமுறை கத்தியால் குத்துவதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் அந்த சிறுவன் தலையிலும் பல முறை ஆவேசமாக உதைக்கிறார்.
சடலத்தின் மீது ஏறி டான்ஸ்: அதன் பிறகும் அந்த சடத்தின் மேலே ஏறி நின்று டான்ஸ் ஆட தொடங்குகிறார், இந்த கொடூரம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கடந்த செவ்வாய்க்கிழமை, வெல்கம் ஏரியாவில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் இந்தச் சம்பவம் நடந்தது. மைனர் சிறுவன் ஒருவன் இளைஞனைச் சரமாரியாகக் குத்திக் கொன்றதாக எங்களுக்கு அழைப்பு வந்த நிலையில், நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அந்த இளைஞனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவர் உயிரிழந்தார்" என்றார்.
ஷாக் சிசிடிவி: சிசிடிவி கேமரா அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்த போலீசார், குற்றவாளியைக் கைது செய்தனர். 350 திருடவே இந்த கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications