"ரூ.82 ஆயிரம் கோடி!" இந்தியர்களிடம் பணத்தை இழந்த அமெரிக்கா! திணறும் வல்லரசு! என்ன நடக்கிறது
டெல்லி: நவீன உலகில் சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஓரே ஆண்டில் அமெரிக்கர்கள் 10 பில்லியின் டாலரை இழந்துள்ளனர்.
சைபர் தாக்குதல்கள் என்பது இந்த நவீன உலகில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. பின்தங்கிய நாடுகள் மட்டுமில்லை வல்லரசு நாடுகள் கூட இந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை.. ஹேக்கர்கள் கைவரிசை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அவை குற்றத்தைக் குறைக்கப் பெரியளவில் உதவவில்லை. இதற்கிடையே அமெரிக்கா சைபர் குற்றம் குறித்த ஷாக் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா
உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவில் சைபர் குற்றங்கள் பெரியளவில் நடக்காது என்றே நாம் பலரும் நினைத்திருப்போம்.. ஆனால், உண்மை அப்படியில்லை. அங்கு ஒவ்வொரு நாளும் சைபர் குற்றங்களால் பலரும் பணத்தை இழந்தே வருகின்றனர். குறிப்பாக அங்கு நடக்கும் பல சைபர் மோசடிகளுக்கு இந்தியர்கள் காரணமாக உள்ளனர். இந்தியாவில் இருந்து செயல்படும் ஃபிஷிங் கும்பல் மற்றும் மோசடிக்கார்களிடம் அமெரிக்கர்கள் பணத்தை இழக்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்தே வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இழப்பு
பெரும்பாலும் அங்குள்ள முதியவர்களுக்குத் தொழில்நுட்பம் சரியாகத் தெரியாது என்பதால் அவர்களே இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் அதிகம் ஏமாறுகின்றனர். இந்தியாவில் சட்டவிரோத கால் சென்டர்களை நடத்தும் மோசக்காரர்கள், தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி தொடர்பு கொண்டு ஏமாற்றுகின்றனர். அங்குள்ள முதியவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் $3 பில்லியின் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.24.8 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதே கவலையளிப்பதாகவும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

82 ஆயிரம் கோடி
இந்தாண்டு, அதாவது கடந்த 11 மாதங்களில் மட்டும் இணையம் அல்லது கால் சென்டர் மோசடி மூலம் அமெரிக்கர்கள் $10.2 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 82 ஆயிரம் கோடியை இந்திய மோசக்காரர்களிடம் இழந்துள்ளனர். கடந்தாண்டு 6.9 பில்லியனாக இருந்த இந்த தொகை, ஒரே ஆண்டில் 47% அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து விசாரிக்கும் எஃப்.பி.ஐ, தொடர்ந்து இது குறித்த தகவல்களை இந்திய அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டே வருகின்றனர். அதனடிப்படையில் இங்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டெல்லி போலீஸ்
இந்த மாத தொடக்கத்தில், டெல்லி போலீஸ் அதிகாரிகள், தலைநகரில் சட்டவிரோத கால் சென்டர்களை நடத்தி, அமெரிக்கர்களிடம் மோசடி செய்ததாக மூன்று பேரைக் கைது செய்தனர். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ரெய்டில் தான் அதிகாரிகள் இவர்களைக் கைது செய்தனர். இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கர்கள் தங்கள் வருமானத்தில் பல லட்ச ரூபாயை இழக்க நேரிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிரந்தர பிரதிநிதி
பொதுவாக அமெரிக்காவில் நடத்தப்படும் இந்த கால்செண்டர் மோசடி பெரும்பாலும் இந்தியாவில் இருந்தே நடத்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்த விவகாரங்களைக் கண்காணிக்கவே எஃப்.பி.ஐ ஒரு நிரந்தர பிரதிநிதியை நியமித்ததுள்ளது.சிபிஐ, இன்டர்போல் மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவே அமெரிக்க இந்தநடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவில் சைபர் தொடர்பாக நடைபெறும் மிகப் பெரிய குற்றங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.

சைபர் குற்றங்கள்
அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் கால் செண்டர் உள்ளிட்ட உதவிகளுக்கு இந்தியாவில் இருந்த ஆட்களை நியமித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து கால் வரும்போது, அமெரிக்கர்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.. குறிப்பாக அங்குள்ள முதியவர்களைக் குறிவைக்கும் இந்திய சைபர் குற்றவாளிகள், உதவி செய்வது போல நடித்து அவர்களிடம் பணத்தை கறைந்துவிடுவார்கள்.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications