இது என்ன கோரிக்கை? இப்படியெல்லாம் இனி மனு தாக்கல் செய்தால்.. டென்ஷன் ஆன உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது விசித்திரமான சில கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்வதையும் காண முடிகிறது. இந்த மனுக்களுக்காக நேரத்தை வீணடித்ததாக கோர்ட் அபராதத்துடன் தள்ளுபடி செய்யும். அந்த வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை பார்த்ததும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டென்ஷன் ஆகி மனுதாரரை எச்சரித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது சில விசித்திரமான கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்யப்படுவதையும் காண முடிகிறது. இத்தகைய கோரிக்கைகளுடன் வரும் மனுக்களை விசாரணைக்கு ஏற்காமல் சில சமயம் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதேபோல், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கடுமையான அபராதமும் மனுதாரருக்கு விதிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக எத்தனையோ வழக்குக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் விதமாக சில பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்படுவதை காண முடிகிறது. அந்த வகையில்தான் இன்று உச்ச நீதிமன்றத்தில் சுரிந்தர் குந்த்ரா என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்பிக்களையும் டிஜிட்டல் முறையில் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற உடனே எம்.எல்.ஏ, எம்.பிக்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். அவர்களை 24 மணி நேரம் கண்காணிப்பதோடு, அந்த சிசிடிவி காட்சிகளை அனைத்து குடிமக்களும் எப்போதும் பார்க்கும் வகையில், மொபைல் போனில் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது
இந்த மனு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவில் கோரப்பட்டு இருந்த காரணத்தை பார்த்ததும் டென்ஷன் ஆன தலைமை நீதிபதி, எம்.பி, எம்.எல்.ஏக்களை எப்படி டிஜிட்டல் முறையில் கண்காணிக்க முடியும்? எம்.பி, எம்.எல்.ஏக்களும் தனிநபர் சுதந்திரம் இல்லையா..
இதில் எப்படி நாங்கள் தலையிட முடியும். இதுபோன்ற மனுக்கள் எதிர்காலத்தில் தாக்கல் செய்யக்கூடாது" என்று கூறினார். பொது நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி..பொறுமையோடு இருப்பதாகவும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications