"3 இடங்கள்.. 6 டீம்கள்.." யாருக்கு அதிக வாய்ப்பு.. என்ன நடந்தால் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்
டெல்லி: இந்தாண்டு ஐபிஎல் தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு 6 அணிகள் ப்ளே ஆப் ரேஸில் இன்னும் இருக்கும் நிலையில், அவர்கள் அடுத்த சுற்றுக்குச் செல்ல எவ்வளவு தூரம் வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
லீக் சுற்றுப் போட்டிகள் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ப்ளே ஆப் சுற்றுக்கு மொத்தம் 4 அணிகள் தகுதி பெறலாம் என்ற நிலையில், இப்போது வரை குஜராத் அணி மட்டுமே ப்ளே ஆப் இடத்தை முடிவு செய்துள்ளது. மற்ற முடிவுகள் எப்படி இருந்தாலும் குஜராத் டாப் 2 இடத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
6 அணிகள்: அதே நேரம் மற்ற 3 இடங்களைப் பிடிக்க இப்போது ஆறு அணிகள் போட்டியில் உள்ளன. தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், க்ருனால் பாண்டியாவின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பிளெசிஸின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நிதிஷ் ராணாவின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 6 அணிகள் இன்னும் போட்டிக்கான ரேஸில் இருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே பிளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது. இப்போது ரேஸில் இருக்கும் 6 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு எப்படி முன்னேறும். அதற்கு எவ்வளவு தூரம் வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
சென்னை: சிஎஸ்கே இப்போது 15 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை அணியின் NRR +0.381ஆக இருக்கிறது. தனது கடைசி லீக் போட்டியில் டெல்லியை இன்று எதிர்கொள்கிறது தல தோனி தலைமையிலான சென்னை படை. அந்த போட்டியில் வென்றாலே பிளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். அதேநேரம் டாப் 2 இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

டெல்லி உடனான போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட மற்ற போட்டிகள் அடிப்படையில் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளது.

லக்னோ: 15 புள்ளிகளை லக்னோவும் பெற்று இருந்தாலும் NRR +0.304ஆக உள்ளதால் 3ஆவது இடத்தில் உள்ளது. இது இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணிக்கும் சிஎஸ்கே போலத் தான் நிலைமை. இந்தப் போட்டியில் வென்றால் அடுத்த சுற்று, மிகப் பெரிய ரன் ரேட்டில் வென்றால் முதல் இரு இடங்களைப் பிடிக்க முடியும். தோல்வி அடைந்தாலும் மற்ற போட்டிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்குச் செல்லலாம்.
பெங்களூர்: இப்போது 14 புள்ளிகளைப் பெங்களூர் பெற்று NRR +0.180 உடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. நாளை இவர்கள் குஜராத் அணியை எதிர்கொள்கிறார்கள். கடந்த 2 போட்டிகள் பெற்ற பெரிய வெற்றி, பெங்களூர் அணிக்கு நல்ல ரன்-ரேட்டை பெற்றுத் தந்துள்ளது. ஹைதராபாத்தை மிக பெரிய வித்தியாசத்தில் மும்பை தோற்கடிக்கவில்லை என்றால், குஜராத் அணியை வென்றாலே பெங்களூர் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஏனென்றால் பெங்களூரின் ரன்ரேட் மும்பையை விடச் சிறப்பாகவே உள்ளது.

சிஎஸ்கே, லக்னோ அணிகள் தோற்று பெங்களூர் அணி மிகப் பெரியளவில் வென்றால் டாப் இரு இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமின்றி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோற்றாலும் கூட அடுத்த சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு மும்பை அணி தனது போட்டியில் மோசமாகத் தோற்க வேண்டும்.
மும்பை: இப்போது 14 புள்ளிகள், 0.128 ரன் ரேட்டுடன் மும்பை அணி 6ஆவது இடத்தில் இருக்கிறது, மும்பை தனது கடைசி போட்டியில் நாளை ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இப்போது 6ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசி போட்டியில் வென்று, சென்னை, லக்னோ, பெங்களூர் அணிகளில் ஒன்று தனது இறுதிப் போட்டியில் தோற்றால் மட்டுமே மும்பை அணியால் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும். பெங்களூர் அணிக்கு மும்பையை விட நல்ல ரன்ரேட் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ராஜஸ்தான்: தனது அனைத்து போட்டிகளிலும் ராஜஸ்தான் விளையாடி முடித்துவிட்டது. 14 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் இப்போது மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்து இருக்க வேண்டும். மும்பை, பெங்களூர் அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே ராஜஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கிறது. ராஜஸ்தான் உள்ளே வர வேண்டும் என்றால் பெங்களூர் மிகப் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்..
கொல்கத்தா: இப்போது 12 புள்ளிகளுடன் கொல்கத்தா 7ஆவது இடத்தில் இருக்கிறது. இவர்கள் இன்று லக்னோவை எதிர்கொள்கிறார்கள். கொல்கத்தாவுக்கு ரன்ரேட் -0.256 என மோசமாக இருப்பது பெரிய பிரச்சினை.அவர்கள் முதல் 4 இடங்களுக்குள் நுழைய இன்றைய போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் மேலும், ஆர்சிபி, மற்றும் மும்பை என இரண்டும் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications