Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊசியால் வந்த வினை.. சிக்கிய சசிதரூர்.. மனைவி மரண வழக்கில் டெல்லி நீதிமன்றம் எப்படி விடுவித்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர் வழக்கிலிருந்து அவரின் கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் டெல்லி நீதிமன்றம் எதன் அடிப்படையில் விடுவித்தது என்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி 17-ம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக வழக்கை பதிவு செய்த டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சசி தரூர் சேர்க்கப்பட்டிருந்தார். சசி தரூர் மீது ஐபிசி 498-ஏ 306 ஆகி பிரிவின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். அத்துடன் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது. ஆனால் டெல்லி நீதிமன்றம் 2018ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சசி தரூருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, இதுவரை ஜாமீனில்தான் இருந்து வந்தார்.

ஆக்சிஜன் பற்றாகுறையால் இறப்பு இல்லை என்று நாங்கள் சொல்லணும்.. அதானே? மத்திய அரசுக்கு சிசோடியா கேள்வி.

விஷம் கலக்கவில்லை

விஷம் கலக்கவில்லை

இந்த வழக்கில் வாதிட்ட சசிதரூர் தரப்பு வழக்கறிஞர், "சுனந்தா புஷ்கர் வழக்கில் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவினர் சசி தருர் மீது போடப்பட்ட குற்றச்சாட்டை பெரிதுபடுத்திகாட்டினர். சுனந்தா புஷ்கர் மரணத்தில் சசி தரூர் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் அரசு தரப்பில் ஆதாரங்களை வெளிப்படுத்த இயலவில்லை. சுனந்தா உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் கூட அவரின் உடலில் எந்த விஷமும் கலக்கவில்லை எனத் தெரிவித்தார் என்று வாதிட்டார்.

மனரீதியாக தொந்தரவு

மனரீதியாக தொந்தரவு

அரசு தரப்பில் ஆஜராகிய ஸ்ரீவஸ்தவா வாதிடுகையில் "இறப்பதற்கு முன் சுனந்தா புஷ்கருக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மனரீதியாக சசி தரூர் அவரை தொந்தரவு செய்திருக்கிறார். இது எதிர்பாராத மரணம் அல்ல, திட்டமிட்ட மரணம், விஷம் செலுத்தப்பட்டுள்ளது" என்றார்.

சசிதரூர் விடுதலை

சசிதரூர் விடுதலை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் . கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் சுனந்தா புஷ்கர் மரணத்தில் சசி தரூர் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் அரசு தரப்பில் ஆதாரங்களை வெளிப்படுத்தவில்லை என்று சசிதரூரை விடுவித்தது. இது தொடர்பாக தீர்ப்பில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம். எய்ம்ஸ் பிரேத பரிசோதனை வாரியம் மரணத்திற்கு காரணம் விஷம் மற்றும் அல்பிரஸோலம் அதிகமாக உட்கொண்டதால் என்று கூறியுள்ளது. மரணம் கொலை அல்லது தற்கொலை அல்லது தற்செயலானது என்று அது குறிப்பிடவில்லை.

கொலையா

கொலையா

இதனிடையே சசி தரூர் மீது அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் கையில் ஊசி குத்தப்பட்டதன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு விரும்பியிருக்கிறது. ஆனால் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸில் சுனந்தா சிகிச்சை பெற்ற போது போட்ட ஊசி என்று மருத்துவர்கள் கூறியதை நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இதன் மூலம் ஊசி காரணம் அல்ல என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

காரணங்கள் இல்லை

காரணங்கள் இல்லை

தற்கொலை மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் கூறும் போது, இறந்தவருக்கு தற்கொலை எண்ணங்கள் இருப்பதாக கூறியிருந்தாலும், அவர்கள் தற்கொலைக்கான காரணங்கள் தெளிவாக இல்லை. சாதாரண சூழ்நிலைகளில் புஷ்கரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் சசி தரூர் செயல்பட்டதாக ஆதாரங்கள் இல்லை. அதேபோல் வரதட்சணை கொடுமை அல்லது துன்புறுத்தலை சசிதரூர் செய்ததாக அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+