"துண்டு துண்டாக வெட்டி.." பாக். பயங்கரவாதிக்கு சீக்ரெட்டாக போன வீடியோ! தட்டி தூக்கிய டெல்லி போலீஸ்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவன் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், இந்தச் சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில மாதங்களுக்கு முன்பு ஷ்ரதா என்ற பெண் இதேபோல கொலை செய்யப்பட்ட நிலையில், அதேபோல நடந்திருக்கும் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் 21 வயதான நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபர் போதைக்கு அடிமையானவர் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் கையில் திரிசூலம் ஒன்று பச்சை குத்தப்பட்டு இருந்த நிலையில், அதை வைத்துத் தான் போலீசார் அவரை அடையாளம் கண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா மற்றும் நௌஷாத் என்று இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள்
இருவரும் அந்த இளைஞரிடம் முதலில் நட்பாகப் பழகியுள்ளனர். டிசம்பர் 14ஆம் தேதி அந்த இளைஞரை ஆதர்ஷ் நகரில் இருந்து பால்ஸ்வா டெய்ரியில் உள்ள நௌஷாத்தின் வீட்டிற்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த நபரை இருவரும் கொலை செய்துள்ளனர். தன் பிறகு அந்த நபரின் உடலை எட்டு துண்டுகளாக வெட்டியுள்ளனர். அந்த இளைஞனைக் கொலை செய்வதை வீடியோவாக எடுத்த இருவரும் அதைப் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் தொடர்புடைய சொஹைல் என்ற நபருக்கு அனுப்பியுள்ளனர்.

பயங்கரவாதி
இந்த கொலைக்காக கத்தாரில் உள்ள நௌஷாத்தின் உறவினர் மூலம் நௌஷாத்தின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 2 லட்சம் அனுப்பப்பட்டது. இந்த கொடூரமான குற்றத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார் அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்துள்ள நௌஷாத் ஒரு பயங்கரவாதி என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல வழக்குகளில் நீண்ட காலமாக ஜெயிலில் இருந்துள்ளார். அவர் ஹர்கத் உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான்
சிறையில் இருந்த போது செங்கோட்டை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஆரிப் முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சோஹைல் ஆகியோரை இவர் சந்தித்துள்ளார். சோஹைல் கடந்த 2018இல் பாகிஸ்தான் சென்ற நிலையில், நௌஷாத் ஏப்ரல் 2022 இல் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக சோஹைலுடன் தொடர்பில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதிக செல்வாக்கு மிக்க இந்துக்களைக் கொலை செய்ய வேண்டும் என்று நௌஷாத்திற்கு சோஹைல் பணி வழங்கியுள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாதம்
அதேநேரம் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான ஜக்ஜித் சிங், காலிஸ்தான் பிரிவினைவாத பிரசாரத்தை இந்தியாவில் செய்து வந்தவர். அவருக்கு காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லாவுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரிடம் இருந்தும் போலீசார் மூன்று கைத்துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கை எறி குண்டுகளை போலீசார் மீட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 2020இஸ் கலவரம் நடந்த ஜஹாங்கிர்புரியில் வசித்து வந்துள்ளனர்.

போலீசாருக்கு தெரியாது
கலவரம் நடந்த பகுதியில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இருவர் வசித்து வந்த போதிலும் இது குறித்து போலீசாருக்கு என்பது அதிர்ச்சி தருவதாகவே உள்ளது. கடந்த இஸ்ரேல் தூதரகத்தில் நடந்த பயங்கரவாத சம்பவம் அங்கு இரு இடங்களில் ஆர்டிஎக்ஸ் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications