10 லட்சம் பரிசுப் பணத்திற்காக வருமான வரி வழக்கு.. தங்கைகளிடம் பணம் வாங்கிய அண்ணன் வென்றது எப்படி?
டெல்லி: வருமான வரி நோட்டீஸ் சில சமயங்களில் எளியவர்களுக்கும் எளிதாக வரும்.. எப்படி என்கிறீர்களா.. உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அன்பளிப்பாக பணம் தரும் போது, வருமான வரித்துறை உங்களுக்கு அனுப்ப வாய்ப்பு அதிகம்.. அப்படித்தான் ஆக்ராவைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு நடந்துள்ளது. அண்ணணுக்கு தங்கைகள் தந்த பரிசு பணத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த வழக்கில் எப்படி மகேஸ்வரி வென்றார் என்பதை பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபரான மகேஸ்வரி என்ற ஆண் (மகேஸ்வரி என்று ஆண்களுக்கு வடமாநிலங்களில் பெயர் வைக்கப்படுவது வழக்கம்), தனது டெல்லியில் வசிக்கும் ஒரு சகோதரியிடம் இருந்து ₹2.74 கோடி அன்பளிப்பாகப் பெற்றுள்ளார். மேலும் தனது இன்னொரு சகோதரியிடமிருந்து ₹6.25 லட்சம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளார். இந்த இரண்டு சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிதியைப் பயன்படுத்தி சொந்த தொழிலை மேற்கொண்டிருக்கிறார். 2016-17ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை மகேஸ்வரி தாக்கல் செய்தபோது, தனது வருமானம் ₹10 லட்சம் என்று அறிவித்தார்.

அன்பளிப்பு
2017ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று, அவரது ITR தொடர்பாக வருமான வரித் துறை, பிரிவு 143(2)-ன் கீழ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இமஙர மகேஸ்வரி தனது டெல்லி சகோதரியிடம் இருந்து அன்பளிப்பாக ₹2.74 கோடி பெற்றுள்ளார். அதை அவர் தனது சகோதரியின் ITR-லும் அறிவித்துள்ளார். மற்றொரு சகோதரியிடமிருந்து ₹6.25 லட்சம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளார். அன்பளிப்பு வழங்கியவர்களின் நிதி ஆதாரத்தை நிரூபிக்க ஆவணங்களை மகேஸ்வரி சமர்ப்பித்துள்ளார். ஆனால் வருமான வரி அதிகாரி சில பரிவர்த்தனைகள் குறித்து சந்தேகம் எழுப்பி நோட்டீஸ் அனுப்பினார்.
நோட்டீஸ் ஏன்
குறிப்பாக, டெல்லியில் உள்ள சகோதரியிடமிருந்து ஏப்ரல் 15, 2015 மற்றும் மே 15, 2015 ஆகிய தேதிகளில் பெறப்பட்ட தலா ₹5,00,000 ரொக்க அன்பளிப்பு (மொத்தம் ₹10 லட்சம்) மற்றும் மற்றொரு சகோதரியிடமிருந்து பெற்ற ₹6,25,000 பரிசுகளுக்குப் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி வருமான வரி அதிகாரி நோட்டீஸில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த அன்பளிப்புகள் அனைத்தும் வருமான வரியைத் தவிர்க்கும் ஒரு திட்டமிட்ட ஏற்பாடு என்று வருமான வரி அதிகாரி நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். இதனால், இந்த ₹10,94,000 தொகையை, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 68-ன் கீழ் "விளக்கப்படாத ரொக்கப் பற்று" என்றும் வகைப்படுத்தினார். இதனால் அவர் அதற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து மகேஸ்வரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் ஆக்ரா கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் மகேஸ்வரிக்கு சாதமாக வருமான வரி ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
வருமான வரி வழக்கில் மகேஸ்வரி வெற்றிபெறக் காரணம் என்ன?
அன்பளிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நன்கொடையாளர்களின் நிதித் திறன் ஆகிய இரண்டையும் நிரூபிக்க அவர் சமர்ப்பித்த விரிவான ஆவணங்கள் தான் அவர் வழக்கில் வெற்றிக்கு வழிவகுத்தது.
வருமான வரித் தீர்ப்பாயம் கூறிய முக்கியமான விஷயங்கள்:
"உறவின் நம்பகத்தன்மை: அன்பளிப்புப் பரிவர்த்தனைகள் அனைத்தும் உடன் பிறந்த சகோதரிகள் இடையே நடந்தவை. இது இயற்கையான குடும்பப் பிணைப்பையும், கவனிப்பையும் காட்டுவதால், இந்தப் பரிவர்த்தனைகள் நம்பகமானவை ஆகும்
நிதி ஆதாரம்: இரண்டு சகோதரிகளும் தங்களின் நிதி ஆதாரங்களை தெளிவாக நிரூபித்திருக்கிறார். . ஒருவர் ஆவணப்படுத்தப்பட்ட சொத்து விற்பனை மூலமாகவும், மற்றவர் வங்கிப் பதிவுகள் மூலமாகவும் எப்படி தனக்கு அந்த நிதி வந்ததது என்பதை நிரூபித்துள்ளார்.
பரிவர்த்தனை முறை:
அனைத்துப் பரிவர்த்தனைகளும் முறையாகச் சான்றளிக்கப்பட்டிருக்கிறது. சரியான வங்கி கணக்குகள் மூலம் வந்தவை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. தேவையான அனைத்துத் தகவல்களும் கிடைத்த பிறகும், வருவாய் துறை உரிய சரிபார்ப்பை மேற்கொள்ளத் தவறிவிட்டது. எனவே, விசாரணையில் உள்ள எந்தக் குறைபாட்டிற்கும் வரி செலுத்துவோரைப் பொறுப்பாக்க முடியாது" என்று வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது.
சட்டம் இங்கே என்ன சொல்கிறது?
வருமான வரி சட்டம் பிரிவு 56(2)(x)ன் கீழ், மனைவி, சகோதரன், சகோதரி, பெற்றோர், வாரிசுகள் போன்ற வரையறுக்கப்பட்ட உறவினர்களிடமிருந்து பெறப்படும் அன்பளிப்புப் பணத்திற்கு இந்தியாவில் வருமான வரி விலக்கு உண்டு. இருப்பினும், அன்பளிப்பு வழங்குபவரின் (Donor) நிதி ஆதாரம் (Source of Funds) மற்றும் பரிவர்த்தனையின் உண்மைத்தன்மை (Genuineness) ஆகியவற்றை நிரூபிக்க வேண்டியது, அந்த நன்கொடையை பெறுபவரின் பொறுப்பாகும். இந்த வழக்கில், மகேஸ்வரி அதை வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறார். இதனால் தான் வருமான வரி நோட்டீஸில் இருந்து மகேஸ்வரி தப்பி உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications