நீதிபதி உட்பட 50 பெண்களை ஏமாற்றிய இளைஞர்.. கல்யாண வலை விரித்த திமிங்கலமே சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த 38 வயதாகும் முகீம் கான் என்பவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் நீதிபதி உள்பட 50 பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. திருமணமாகாத, விதவை மற்றும் விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்களை குறிவைத்து ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.

கல்யாண ராணிகள் சிலரை பற்றி அண்மையில் நாம் செய்திகள் படித்திருப்போம். பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் அண்மையில் திருப்பூர் பக்கம் கைதானார். ஆனால் வட இந்தியாவில் இதேபோன்ற குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைதாகி உள்ளார். சமூக வலைதளங்களில் பெண்களுடன் நட்பு பாராட்டி அவர்களை திருமணம் செய்வதாக ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதேபோல் அரசு அதிகாரி என்று கூறி, மேட்ரிமோனியல் தளத்தில் பல புரொபைல்களை கிரியேட் செய்து பல பெண்களிடம் பொய் சொல்லி பணத்தை கறந்து ஏமாற்றி உள்ளார்.

delhi marriage

தன்னை அரசு அதிகாரி என்ற அறிமுகம் செய்து கொள்ளும் முகீம் கான், ஆன்லைனில் பெண்களிடம் நட்பு அழைப்பு விடுப்பார். பின்னர் நட்பு வட்டத்தில் வந்த பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்பார். அத்துடன் தன்னை பற்றி பல பொய்களை கூறியும், கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறியும் நம்ப வைப்பார். ஒரு கட்டத்தில் அந்த பெண்கள் ஏமாந்து திருமணம் செய்த உடன் அல்லது திருமணத்திற்கு தயாரான உடன் அவர்களிடம் பணத்தை கறந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இப்படி நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பெண்களை முகீம் கான் ஏமாற்றி உள்ளார். ஒரு பெண் நீதிபதி உட்பட பல பெண்கள் அவரது பொய்களை நம்பி ஏமாந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி ஏமாற்றி வந்த உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவரான 38 வயதாகும் முகீம் கான் (38), பொய்யான காரணங்களை கூறி பெண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரை பற்றி போலீசார் கூறும் போது, 38 வயதாகும் முகீம் கான் மேட்ரிமோனியல் இணையதளங்களில் போலியான அடையாளங்களுடன் பல புரொபைல்களை உருவாக்கி பெண்களிடம் கவர்ச்சிகரமான பொய்களை கூறி வலை விரித்து சிக்க வைத்துள்ளார்.

குறிப்பாக திருமணமாகாத, விதவை மற்றும் விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்களைத்தான் திருமணத்திற்காக குறிவைத்து வந்திருக்கிறார். முகீம் கான் தன்னை ஒரு அரசு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். தனது மனைவி இறந்து விட்டதாகவும், தனது மகளைக் கவனிக்க முடியவில்லை என்றும் பொய்யான கதைகளைக் கூறி பெண்களை ஏமாற்றி உள்ளார்.

திருமணமாகி மூன்று குழந்தைகளைக் கொண்ட முகீம் கான், இந்த பெண்களுடன் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார். பின்னர் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து திருமண தேதியை முடிவு செய்கிறார். பின்னர் அவர் அவர்களின் நம்பிக்கயைப் பெற்றவுடன், அவர் திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய அல்லது மற்ற திருமண செலவுகளுக்கு பணம் கேட்கிறார். பின்னர்
பின்னர், அவர் திருமணம் செய்யாமல் எஸ்கேப் ஆகிவிடுவார். நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியும் ஒருவர் ஆவார்.

எப்படி ஆரம்பம் ஆனது: முகீம் கான் 2020 இல் இதனை ஆரம்பித்துள்ளார். தனது முதல் திருமணத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திருமண மோசடியில் இறங்கி உள்ளார். முதல் முதலாக வதோதராவைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற ஐந்து வயது மகளுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் பழகி உள்ளார். இறுதியாக வதோதராவை விட்டு வெளியேறுவதற்கு முன், அவர் தனது பணப்பையை தொலைத்துவிட்டதாக ஒரு பொய்யான கதையை கூறி அந்த பெண்ணிடம் இருந்து ₹ 30,000 பணத்தை வாங்கி ஏமாற்றினார்.

அந்த முயற்சி வெற்றி பெறவே அடுத்தடுத்து விவகாரத்து ஆன, கணவனை இழந்த முஸ்லிம் பெண்களை ஏமாற்றி எளிதாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. இப்பபடியே 50 பெண்களை ஏமாற்றியவர் இறுதியாக டெல்லியில் ஒரு பெண்ணை ஏமாற்றிய புகாரில் கைதாகி உள்ளார். அங்கு தான் அவரது உண்மை வெளிப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+