பர்சனல் லோன் எடுக்க போறீங்களா.. கதறும் மக்கள்.. இனி கிடைப்பது கஷ்டம்தான்.. ஏன் தெரியுமா?
டெல்லி: தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன் எடுக்க முயலும் பலர்.. அதை எடுக்க முடியாமல் கடுமையாக திணறி வருகின்றனர். தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் பலரும் இந்த மாதங்களில் அதற்கு ஒப்புதல் பெற முடியாமல் கடுமையாக திணறி வருகின்றனர்.
ஏனென்றால் புதிய தனிநபர் கடன் விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தனி நபர் கடன் வாங்குவதை.. அதாவது பர்சனல் லோன் எடுப்பதை இந்த நடவடிக்கை கடினமாக்குகிறது. ஜனவரி 1, 2025 முதல், வங்கிகள் சிபில் ஸ்கோர் அறிக்கைகளை 30 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

சிபில் ஸ்கோர்
முன்பெல்லாம் லோன் வாங்க விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் கடந்த மாதம் உங்களின் சிபில் ஸ்கோர் எப்படி இருந்தது என்றே பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 2 வாரங்களுக்கு முன் உங்கள் சிபில் ஸ்கோர் எப்படி இருந்தது என்று பார்க்க தொடங்கி உள்ளனர். ஆர்பிஐ புதிய விதி ஏற்கனவே வங்கிகளில் அமலுக்கு வந்துவிட்டது.
இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகள் சிறிய தவறுகளை செய்தால் கூட அதனால் உங்களுக்கு லோன் கிடைக்காமல் போகலாம். அதாவது இனி நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள், பிழைகள் கூட உங்களுக்கு லோன் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும்.
ஏன் முக்கியம்?
இதன் மூலம் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களின் நிதிநிலையை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்யலாம். அதாவது துல்லியமாக சிபில் ஸ்கோரை கணக்கிட முடியும். இந்த நடவடிக்கையானது அதிக அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் வாங்குபவர்கள் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுக்கு பர்சனல் லோன் கிடைக்கும். மாத தொடக்கத்தில் ஏதாவது தவறு செய்தால் அது அடுத்த மாதம் உள்ள சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கலாம்.. 2 வாரங்களிலேயே பிரதிபலிக்கும்.
தங்க கடன் மாற்றம்
அதேபோல் தங்க நகை கடன் வழங்குவதில் பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும். தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோவிற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.
லோன் இஎம்ஐயில் செய்யப்படும் மாற்றம்
இன்னொரு பக்கம் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இஎம்ஐ செலுத்துவதில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மாதாந்திர தவணைகள் (இஎம்ஐக்கள்) மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும். வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் மீதான எதிர்பாராத கட்டணங்களை, மாற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீப காலங்களில் பல கடன் வாங்குபவர்கள் திடீர் EMI அதிகரிப்புகள், EMI செலுத்துவதற்கான கால நீட்டிப்புகள் மற்றும் தெளிவற்ற கடன் விதிமுறைகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதாவது நீங்கள் 10 ஆயிரம் இஎம்ஐ கட்டி வந்துள்ளீர்கள் என்றால் திடீரென.. உங்கள் வாங்கி இனி 15 ஆயிரம் கட்ட வேண்டும் என்று சொல்லலாம். அல்லது 1 வருட இஎம்ஐயை இனி ஒன்றரை வருடம் என்று கூட உயர்த்தலாம்.
இதை தடுக்கவே புதிய ரிசர்வ் வங்கி விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கடன் வாங்குபவர்களை இதுபோன்ற எதிர்பாராத மாற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடன் திருப்பிச் செலுத்தும் விதிகளில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன: கடன் வழங்குபவர்கள் கடன் காலத்தை அதிகரிப்பதற்கு முன் கடனாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும். வட்டி விகித உயர்வு காரணமாக EMI அல்லது காலவரையறையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
கடன் வாங்குபவர்கள் கடன் வழங்குவதற்கு முன் முழுமையான கடன் விவரங்களுடன் ஒரு முக்கிய உண்மை அறிக்கையை (KFS) பெற வேண்டும்.. கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் தானியங்கு EMI அதிகரிப்பு அல்லது கால நீட்டிப்புகள் செய்ய அனுமதி இல்லை. முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் இன்னும் வெளிப்படையாக வேண்டும். கடன் அறிக்கைகளில் வட்டி மற்றும் மற்ற விதிகள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
முன்பு, வங்கிகள் உங்கள் EMIயை அதிகரிக்கலாம் அல்லது உங்களிடம் கேட்காமலேயே உங்கள் கடன் காலத்தை நீட்டிக்கலாம். இப்போது, கடன் வாங்குபவர்கள் இதில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்களை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது.












Click it and Unblock the Notifications