கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை இழந்தது எப்படி! அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
டெல்லி: கச்சத்தீவு அருகே காலங்காலமாகத் தமிழர்களுக்கு இருந்த மீன்பிடி உரிமை வெறும் 2 ஆண்டுகளில் விட்டுக் கொடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவுக்குச் சொந்தமாகவே கச்சத்தீவு இருந்துள்ளது. ராமநாதபுரம் மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்த கச்சத்தீவு பகுதியில், பாரம்பரியமாகவே தமிழக மீனவர்கள் சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தைக் கூட தமிழக மீனவர்கள் தான் கட்டினர்.

ஆனால், இவை அனைத்தையும் தாண்டி 1974இல் மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது. இதனால் இப்போதும் கூட நமது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
ஜெய்சங்கர்: இதற்கிடையே லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கச்சத்தீவு விவகாரம் இப்போது மீண்டும் பேசுபொருள் ஆகி இருக்கிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களை நேற்று வெளியிட்டு இருந்தார். பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தில் பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறிப்பாக நமது மீன்பிடி உரிமை எப்படிப் பறிபோனது என்பதை அவர் விளக்கியுள்ளார். அதாவது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இலங்கைக்கு இந்த தீவை வழங்க விரும்பியதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த உரையை நான் இங்கே மேற்கொள் காட்ட விரும்புகிறேன்.
முதல் ஒப்பந்தம்: அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த ஸ்வரன் சிங் சொல்கிறார். பால்க் வளைகுடாவில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானது மற்றும் சமமானதாகக் கருதப்படும் என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும் அப்பகுதியில் கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்த புனித யாத்திரை, மீன்பிடி உரிமைகள் ஆகியவை எதிர்காலத்திற்காக முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இரண்டாவது ஒப்பந்தம்: ஆனால், இரண்டு ஆண்டுகளில் அதாவது 1976ஆம் ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த ஒப்பந்தத்தில், இந்தியா முன்மொழிந்ததை நான் வாசித்துக் காட்ட விரும்புகிறேன். இரு நாடுகளாலும் தங்களுக்கான பிரத்தியேக பொருளாதார மண்டலங்களை நிறுவலாம். இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு அந்தந்த மண்டலங்களில் வாழும் மற்றும் உயிரற்ற வளங்களின் மீது உரிமைகள் கிடைக்கும்.
அதேநேரம் இந்திய மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் கடந்த காலங்களில் மீன்பிடித்து வந்த பகுதிகள், கடல் பகுதி மற்றும் இலங்கையின் பிரத்தியேக மண்டலத்தில் நுழையக்கூடாது... என்றே அதில் முன்மொழியப்பட்டு இருக்கிறது. அதாவது 1974இல் உத்தரவாதத்தைக் கொடுத்துவிட்டு இரண்டு ஆண்டுகளில் 1976இல் உறுதிமொழியில் தரப்பட்டதை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துக் கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னிடம் பல முறை இது குறித்து கடிதம் எழுதி இருக்கிறார். நானும் 21 முறை தமிழக முதல்வருக்குப் பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். எனவே, இது ஏதோ திடீரென எழுந்த விவகாரம் இல்லை. நீண்ட காலமாகவே இந்த பிரச்சினை இருந்துள்ளது" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications