சிலிர்க்குதே! ஷேக் ஹசீனாவை காக்கும் "கருடன்கள்".. பக்காவாக திட்டமிட்ட அஜித் தோவல்.. இதுதாங்க இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தங்கி இருக்கும் ஷேக் ஹசீனாவை இந்தியாவின் சிறப்பு படை பிரிவு ஒன்று காத்துகொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் அவர் அங்கே இருப்பார்.. இந்திய அரசின் திட்டங்கள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் ரகசிய சேஃப் ஹவுஸ் ஒன்றில் தற்போது தற்காலிகமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டு உள்ளார். ஷேக் ஹசீனாவை இந்தியா நீண்ட காலம் வைத்திருக்க வாய்ப்பு இல்லை. தற்போது அடைக்கலம் கொடுத்தாலும்.. அதன்பின் சவுதி அரேபியா அல்லது வேறு ஏதாவது நாட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது அவரின் வீடு இருப்பதாக கருதப்படும் பகுதிக்கு அடிக்கடி கருப்பு நிற கார் ஒன்று உள்ளே வெளியே சென்று வருவதால் அவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.,

bangladesh sheikh hasina

ஷேக் ஹசீனாவை ஏற்றுக்கொள்ள இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக இவருக்கு விசா வழங்க மறுத்துள்ளன. இந்தியாவில் ரகசிய சேஃப் ஹவுஸ் ஒன்றில் தற்போது தற்காலிகமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டு உள்ளார். சேஃப் ஹவுஸ் என்றால் பொதுவாக உளவாளிகள், வெளிநாட்டு அரசியல் புள்ளிகள் ஆகியோரை தங்க வைக்க பயன்படுத்தும் இடம் ஆகும்.

வெளிநாட்டு தலைவர்களுக்கு புகலிடம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு என்று தனியாக புகலிடக் கொள்கை இல்லை. இருந்தாலும் ஹசீனா இப்போது நம்ப கூடிய ஒரே நாடு இந்தியாதான். அவருக்கு வேறு எங்கும் இவ்வளவு பாதுகாப்பு கிடைக்காது.

ஷேக் ஹசீனாவை நினைத்ததை விட கூடுதலாக சில காலம் வைக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டு உள்ளது. காரணம் அவரை யுகே ஏற்றுக்கொள்ளவில்லை அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பாதுகாப்பு வழங்கும் டீம் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் அவரை பாதுகாக்க தயாராகி வருகின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார், இதில் நடக்கும் சிறிய சிறிய அப்டேட்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து தகவல் அளித்து வருகிறார்.

காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் ஹசீனா வந்திறங்கியபோது தோவல்தான் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அவர் அருகில் உள்ள "பாதுகாப்பான வீட்டிற்கு" மாற்றப்பட்டார். அதாவது சேஃப் ஹவுஸ். அவரை வேறு ஒரு சேஃப் ஹவுசுக்கு மாற்றும் திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது உளவுத்துறை அதிகாரிகள் இருக்க கட்டப்படும் சேஃப் ஹவுஸுக்கு அவர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய உளவுத்துறையால் நிர்வகிக்கப்படும் மற்றொரு "சேஃப் ஹவுசுக்கு" ஹசீனா மாற்றப்படுவாரா அல்லது உயர் பாதுகாப்புடன் தலைநகரில் வேறு இடத்திற்கு மாற்றப்படுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்தியன் வெளியுறவுத்துறை வட்டார தகவலின்படி, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கூடிதான் இது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.

இந்திய விமானப்படையின் கருட படை எனப்படும் கருட் கமாண்டோக்கள் ஹிண்டன் விமான தளத்தை பாதுகாத்து வருகின்றனர். அங்குதான் ஹசீனா உள்ளார். அங்கு ஹசீனா வந்த C-130J இராணுவ போக்குவரத்து விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்பிற்காக உயரடுக்கு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+