சிறப்பே இதுதான்! நாளை நிலவில் இறங்கும் லேண்டர்! சந்திரயான் 2 - சந்திரயான் 3 இடையேயான வேறுபாடு என்ன?
டெல்லி: சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நாளை மாலையில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைக்க உள்ளது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் சந்திரயான் - 3 மற்றும் சந்திரயான்- 2 இடையேயான வித்தியாசங்கள் என்ன? முந்தைய திட்டத்தில் இருந்து சந்திரயான்- 3 மேம்படுத்தப்பட்டுள்ளது எப்படி? என்பது பற்றிய 8 முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 2 என்பது 2019ல் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்தியான் 2 விண்கலம் பூமியின் சுற்றுவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தது. ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிவர ரோவரை உள்ளடக்கிய விக்ரம் லேண்டர் ஆர்ப்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி தரையிறங்க புறப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க முயன்றபோது திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிலவில் தரையிறங்க வேண்டிய லேண்டர் விழுந்து நொறுங்கியது. இருப்பினும் ‛சந்திரயான் 2' திட்டத்தின் ஆர்ப்பிட்டர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் 3 திட்டத்தை உருவாக்கியது. கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணுக்கு பாய்ந்தது. நாளை கடந்த 18 விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் குறைந்தபட்சமாக 113 எனவும், அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. தற்போது விக்ரம் லேண்டருக்கும், நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் துவங்கி உள்ளனர்.
நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளிவரும் ரோவர் கருவி நிலவின் தென்துருவத்தை 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் கால்பதிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் இந்தியா மகத்தான சாதனையை படைக்க காத்திருக்கிறது.
* சந்திரயான்-2 என்பதன் எடை 3,850 கிலோவாக இருந்தது. ஆனால சந்திரயான் 3ன் எடை என்பது 50 கிலோ அதிகரித்து 3,900 என்ற அளவில் இருந்தது. இதில் 3 எரிபொருள் நிரப்பும் பகுதிகள் 2,148 கிலோவாகவும், லேண்டர் பகுதி 1,752 கிலோவாகவும் ரோவர் பகுதி 26 கிலோவுடன் ராக்கெட்டில் இடம்பெற்றிருந்தது.
* சந்திரயான் 3 ல் அதிதொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சந்திரயான் 2 ல் ஒரு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டு இருந்தது.
* சந்திரயான்-2 என்பதன் எடை 3,850 கிலோவாக இருந்தது. ஆனால சந்திரயான் 3ன் எடை என்பது 50 கிலோ அதிகரித்து 3,900 என்ற அளவில் இருந்தது. இதில் 3 எரிபொருள் நிரப்பும் பகுதிகள் 2,148 கிலோவாகவும், லேண்டர் பகுதி 1,752 கிலோவாகவும் ரோவர் பகுதி 26 கிலோவுடன் ராக்கெட்டில் இடம்பெற்றிருந்தது.
* சந்திரயான் 2 என்பது 7 ஆண்டு ஆய்வுப்பணிக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் சந்திரயான் 3 என்பது 3 அல்லது 6 மாதங்கள் வரை ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
* சந்திரயான் 3 ல் அதிதொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சந்திரயான் 2 ல் ஒரு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டு இருந்தது.

* சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் ஒன்பது ‛in-situ instruments' கருவிகளை கொண்டிருந்தது. ஆனால் சந்திரயான் 3 என்பது ஸ்பெக்டரோ போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட்டரி எர்த் எனும் ஒரு கருவியை மட்டுமே கொண்டுள்ளது. இது நிலவின் சுற்றுவட்டபாதையில் இருந்து பூமியின் ஸ்பெக்ட்ரல் துருவங்களின் அளவீடுகளை கணக்கீடு செய்ய முடியும்.
* மேலும் சந்திரயான் 3 என்பது எல்ஆர்ஏ எனும் லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரேயை லேண்டருடன் கொண்டுள்ளது. இது நிலவின் அமைப்பின் புரிந்து கொள்வதற்கான 2ம் கட்ட பரிசோதனையாக செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* அதோடு கடந்த சந்திரயான் 2 திட்டத்தின் போது நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறங்க முயற்சித்தது. அப்போது திடீரென்று தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்த லேண்டர் நிலவின் மீது விழுந்து நொறுங்கியது. இத்தகைய சூழலில் தான் தற்போதைய விக்ரம் லேண்டரின் தரையிறங்கும் பகுதி கடினமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications