பிரதமர் மோடி எப்படி புகழ்பெற்ற தலைவராகவே உள்ளார்? காரணம் இதுதான்! ரகசியம் உடைத்த பிரசாந்த் கிஷோர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி எப்படி அனைத்து சர்வேக்களிலும் புகழ்பெற்ற தலைவராக நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்? என்பது பற்றிய கேள்விக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2019 தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமராகி தொடர்ந்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமராக தொடரும் முனைப்பில் நரேந்திர மோடி வியூகம் வகுத்து வருகிறார். பல மாநிலங்களில் பூத் வாரியாக பாஜகவை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதற்கிடையே தான் இந்தியா அளவிலும், உலகளவிலும் அடிக்கடி பல்வேறு நிறுவனங்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் குறித்து கருத்து கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில் பல கருத்து கணிப்புகளில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சமீபத்தில் கூட அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் மக்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடிமுதலிடம் பிடித்தார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 76 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி எப்படி அனைத்து சர்வேக்களிலும் புகழ்பெற்ற தலைவராக முன்னிலையில் உள்ளார்? என்பது பற்றி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‛‛பிரதமர் மோடி 45 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இந்த பயணம் தான் அவரை பலமான தலைவராக மாறி உள்ளது. 15 ஆண்டு சங்கம் வாயிலாகவும், 15 ஆண்டுகள் கட்சிக்காவும் பணி செய்து குஜராத் முதல்வரானார். இந்த அனுபவத்தை வைத்து பார்த்தால் நாட்டில் சிலர் மட்டுமே இப்படி இருப்பார்கள். இந்த நீண்ட அனுபவத்தின் மூலம் தான் பொதுமக்கள் என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதை மோடி புரிந்து கொண்டு சிறந்து விளங்குகிறார்'' என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications