"கிணத்தை காணோம் போல.." நினைவுச் சின்னங்களை தொலைத்த இந்தியா! அதுவும் 50 நினைவு சின்னங்கள் மிஸ்ஸிங்
டெல்லி: நாடு முழுக்க இருக்கும் நினைவுச் சின்னங்கள் குறித்த நடத்தப்பட்ட ஆய்வில் அதில் சுமார் 50 நினைவுச் சின்னங்களை நாம் இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
கடந்த 2008இல் வெளியான "கண்ணும் கண்ணும்" என்ற திரைப்படத்தில் வடிவேலுவின் கிணத்தை காணோம் காட்சி மிகவும் பிரபலமானது. அதாவது ஓவர் நைட்டில் தனது கிணத்தை யாரோ சிலர் திருடிவிட்டதாகப் புகார் அளிப்பார்.
அவர் சொல்வதை நம்பாமல் போலீசார் அந்த இடத்திற்கு வந்து பார்ப்பார். பல கேள்விகளைக் கேட்பார். இருப்பினும், வடிவேலு தனது கிணத்தை தான் காணோம் என்பதில் உறுதியாக இருப்பார். இதைக் கேட்டு வெறுத்துப் போகும் போலீஸ் ஆய்வாளர், தனது வேலையே ராஜினாமா செய்வார்.

நினைவுச் சின்னம் மாயம்
இதற்கிடையே அதேபோல ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதாவது இந்தியாவில் மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்த 3,693 நினைவுச்சின்னங்களில் 50 வரை காணவில்லை என்று நாடாளுமன்றத்தில் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்க முடியாத சூழலில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

காரணம்
விரைவான நகரமயமாக்கல், அணைகளில் நீர் அதிகரித்து நினைவுச் சின்னங்களை மூழ்கடித்தது உள்ளிட்ட காரணங்களால் சில நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொலைதூர இடங்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் உள்ள நினைவுச் சின்னங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 'இந்தியாவில் கண்டுபிடிக்க முடியாத நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

எங்கே
இப்படிக் காணாமல் போன நினைவுச்சின்னங்களில் 11 உத்தரப் பிரதேசத்தில் மாயமாகியுள்ளன. டெல்லி மற்றும் ஹரியானாவில் தலா இரண்டு நினைவுச் சின்னங்கள் மாயமாகியுள்ளன. அதேபோல அசாம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநில நினைவுச் சின்னங்களும் மாயமாகியுள்ளன. இவற்றில் 14 நினைவுச்சின்னங்களை நகரமயமாக்கலால் இழந்துள்ளோம். 12 நீர்த்தேக்கங்கள் அல்லது அணைகளால் மூழ்கியுள்ளன.. மீதமுள்ள 24ஐ கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அதிகாரிகள் விளக்கம்
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தெளிவான அட்ரைஸ் இல்லாததே இவை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அவை வேறு இடத்திற்கு நகர்த்தப்பட்டு இருக்கலாம். அல்லது சேதமடைந்திருக்கலாம்.. இதனால் அவற்றைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம்.. 1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தான் பல நினைவுச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு பழைய நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் புதிய நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது.

புறக்கணிப்பு
அடுத்தடுத்த வந்த அரசுகள் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தன. இதனால் பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டது. இப்போது கூட கடுமையான ஊழியர் பற்றாக்குறையுடன் தான் தொல்லியல் துறை இயங்கி வருகிறது. நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிகளுக்குக் கூட போதிய ஊழியர்கள் இல்லை. இதுவே இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் மாயமாகிப்போக முக்கிய காரணமாக உள்ளன. சொல்லப்போனால் சுதந்திரத்திற்கு பிறகு நினைவுச் சின்னங்களை நாம் கணக்கிடக் கூட இல்லை. 2013இல் தான் முதல்முறையாக இப்படி நினைவுச் சின்னங்கள் கணிக்கப்பட்டன.

50 நினைவுச் சின்னங்கள்
அப்போது சுமார் 92 நினைவுச் சின்னங்கள் மாயமாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 92 நினைவுச் சின்னங்களில், 42 தொல்லியல் துறையின் முயற்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மீதமுள்ள 50 நினைவுச் சின்னங்களில் 14 விரைவான நகரமயமாக்கல், 12 நீரில் மூழ்கியும் மாயமாகியுள்ளன. மற்ற 24 நினைவுச் சின்னங்கள் எங்கு உள்ளது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. நாட்டில் மொத்தம் 3678 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications