Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரேயொரு ஷேர் தான்.. மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறித்த அந்த ஒரு ‛பாஸ்வேர்ட்’ - என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி இன்று பறிக்கப்பட்டது. இந்த பதவி பறிப்புக்கு பின்னணியில் அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பகிர்ந்து கொண்ட முக்கிய பாஸ்வேர்ட் தான் காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முக்கிய நபராக அறியப்பட்டவர் தான் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்.

How Mohua Moitra expels from Parliament? and How She admits shared Parliament login password?

49 வயது நிரம்பிய மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். இவர் நாடாளுமன்றத்தின் லோக்சபா, பொதுவெளி, சமூக வலைதளம் என அனைத்து இடங்களிலும் பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

மேலும் பாஜகவுக்கு எதிராக பேசுவதில் ‛பையர் ப்ராண்ட்' பேச்சாளராக இவர் அறியப்பட்டார். இந்நிலையில் தான் அதானி விவகாரம் குறித்த நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நாடாளுமன்ற நெறிமுறை குழு நிஷிகாந்த் துபே மற்றும் மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் அறிக்கை 479 பக்கங்களாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அதில் மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் அவரது எம்பி பதவியை பறிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து லோக்சபா நெறிமுறை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் இன்று லோக்சபாவில் மஹுவா மொய்த்ரா குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா எம்பியின் பதவி நீக்கத்துக்கு பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பாஸ்வேர்ட் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும். இந்த பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப நினைக்கும் கேள்விகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் மொத்தம் 60 கேள்விகள் கேட்டு இருந்தார். இதில் 50க்கும் மேலான கேள்விகள் என்பது அதானி விவகாரத்தை சார்ந்து இருந்தது. ஆனால் இந்த கேள்விகளை மஹுவா மொய்த்ரா எழுப்பவில்லையாம். அதாவது மஹுவா மொய்த்ரா எம்பி சார்பில் தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தன் எழுப்பியுள்ளாராம். இதற்காக மஹுவா மொய்த்ரா எம்பிக்களுக்கான பாஸ்வேர்ட்டை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனிடம் கூறியுள்ளார். அதனை பயன்படுத்தி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதான் மஹுவா மொய்த்ராவின் பதவி பறிபோக முக்கிய காரணமாக இருந்தது. அதோடு தனக்கும், மஹுவா மொய்த்ராவுக்கும் நட்பு உள்ளது. நாடாளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்ப உதவியாக என்னிடம் அதற்கான பாஸ்வேர்ட்டை பகிர்ந்து இருந்தார். அதோடு அவர் என்னிடம் இருந்து பணம், பரிசு பொருட்களை பெற்றிருந்தார் எனவும் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார். இந்த அறிக்கையை மஹுவா மொய்த்ரா முற்றிலுமாக மறுத்தார். இருப்பினும் அவரது அறிக்கை மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கலை ஏற்படுத்தியதோடு தற்போதை பதவியை பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+