நாங்க வந்தா "டெஸ்லா" எல்லாம் அவ்வளவுதான்! எலான் மஸ்கிற்கு ஓபன் சேலஞ்ச் கொடுக்கும் ஓலா! சரியான போட்டி
டெல்லி: இந்தியாவின் புதிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஓலாவின் உரிமையாளர் கூறியுள்ள சில கருத்துகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இப்போது மிகவும் வெற்றிகரமான ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக ஓலா இருக்கிறது. அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் ஓலா தன்னை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.
மளமளவென இந்த நிறுவனம் அடையும் வளர்ச்சி முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்க்க தவறுவதில்லை. இந்நிலையில், அந்த நிறுவன ஒனர் டெஸ்லா நிறுவனத்திற்கே சேலஞ்ச் கொடுத்து இருக்கிறார்.

ஓலா
ஓலா நிறுவனம் பவிஷ் அகர்வால் என்ற நபரால் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. முதலில் இது கார்களை வாடகைக்கு எடுக்கும் ஒரு பிளாட்பார்மாகவே தன்னை அறிமுகப்படுத்தியது. பின், ஆட்டோ, பைக் என எல்லாமே ஓலாவில் வந்துவிட்டது. மேலும், உணவு டெலிவரி பொருட்கள் டெலிவரி செய்வதை வைத்து உள்ளனர். அத்துடன் நிற்காமல் அடுத்தகட்டமாக மின்சார வாகனச் சந்தையிலும் இவர்கள் அடியெடுத்து வைத்தனர்.

மின்சார வாகனம்
இவர்களின் முதல் மின்சார ஸ்கூட்டர் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இருப்பினும், அதற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓலா மின்சார வாகனத்தில் பிரச்சினை இருப்பதாகவே சொல்லப்பட்டது. இதனால் ஓலாவின் பெயரும் கெட்டுப்போனது. இருப்பினும், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பவிஷ் அகர்வால் அடுத்து மின்சார கார் தயாரிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

எலான் மஸ்க்
இது தொடர்பாக ஓலாவின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இப்போது புதிதாக மின்சார கார்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இதில் எங்கள் ஊழியர்கள் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர். எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்கு பதிலாக இந்தியாவில் இந்த ஓலா கார்கள் இருக்கும். ஆடம்பரமான ஓலா கார்களுக்கு மாற்றாக எளிமையான காராக இது இருக்கும்,

குறைந்த விலை
டெஸ்லா கார்களில் குறைந்த விலையில் விற்கப்படும் மாடலின் விலையே $50,000 (ரூ.41 லட்சம்) ஆகும். இது உலகின் பெரும்பாலான மக்களால் வாங்க முடியாது. $1,000 (சுமார் ஒரு லட்ச ரூபாய்) முதல் $50,000 வரை பல்வேறு விலைகளில் புதுப்புது மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இப்போது எங்களுக்குக் கிடைத்து உள்ளது.

போட்டி
நான் ஓலாவுக்கு ஈஸியான வழி கிடைப்பதை விரும்பவில்லை.. ஓலா ரிஸ்க் எடுக்கத் தயங்காத ஒரு நிறுவனம். எங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ஒன்றும் புதிதும் இல்லை. இந்தியா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராகவும், இரு சக்கர வாகனங்களுக்கு மிகப் பெரிய சந்தையாகவும் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை $150 பில்லியன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பிரச்சினை
எங்களின் இரு சக்கர வானத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு தான் கிடைத்து உள்ளது. சப்ளே செயினில் இருந்த சில சிக்கல்களால் விற்பனை குறைந்து உள்ளது. அது சீக்கிரம் சரியாகும். நமது நாட்டில் இருக்கும் பெரிய வானக உற்பத்தியாளர்கள் மின்சார வாகனங்களில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் இத்தை காலம் இந்தியா இந்தத் துறையில் பின்தங்கி இருந்தது. எங்களைப் போன்ற நிறுவனங்கள் தான் மின்சார வாகனங்களை முதலில் சீரியஸாக எடுத்தன.

இந்தியாவே மாறும்
குறைந்த விலையில் மின்சார வாகனங்களை உருவாக்குவது மட்டுமின்றி, 5G, பசுமை ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்று பல்வேறு விஷயங்களிலும் இந்தியா அதன் போட்டியாளர்களை எளிதாக ஓவர்டேக் செய்யும். இந்தியாவைப் பல ஆண்டுகளாக வளரும் நாடு என்றே கூறி வருகிறார்கள். எங்கள் தலைமுறை அந்த நிலையை மாற்றுவோம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். பொறுப்பு மற்றும் வாய்ப்பு இரண்டையும் நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications