"எப்புட்றா.." சில நிமிடங்களில் ரூ.500 கோடி லாபம்.! வாயை பிளக்க வைத்த ரேகா ஜுன்ஜுன்வாலா! அது எப்படி
டெல்லி: நாட்டின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்த மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மனைவியின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 500 கோடி அதிகரித்துள்ளது.
நாட்டின் டாப் முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. சிலர் இவரை இந்தியாவின் வாரன் பப்பெட் என்று கூட அழைப்பார்கள். சரியான நிறுவனங்களைக் குறைந்த விலையில் வாங்குவதில் இவர் புகழ்பெற்றவர்.
இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். கடைசி வரை பிஸ்னஸில் கவனம் செலுத்தி வந்த இவர், இறுதியாக ஆகாஷா ஏர் என்ற விமான நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார். இவர் பல நிறுவனங்களில் சரியாக முதலீடு செய்து மிகப் பெரிய லாபத்தைப் பார்த்தவர்.

ஜுன்ஜுன்வாலா: இவரது டைட்டன் முதலீடு என்பது மெகா வெற்றிக் கதையாக அமைந்தது. டைட்டன் நிறுவனம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்பதைத் தொடக்கத்திலேயே கணித்த இவர், அதில் முதலீடு செய்தார். அது பல மடங்கு லாபத்தை இவர்களுக்கு அள்ளிக் கொடுத்ததது. இதற்கிடையே மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு மட்டும் டைட்டன் நிறுவனத்தில் இப்போது 5.29 சதவீத பங்குகள் இருக்கிறது. இதன் பங்கின் மதிப்பு நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது.
அதாவது வியாழக்கிழமை மாலை 3104 ரூபாய்க்கு வர்த்தகமானது. வியாழன் மாலை டைட்டன் குழுமம் அதன் ஜூன் காலாண்டு வரையிலான அறிக்கையை வெளியிட்டது. ஜூன் காலாண்டில் அனைத்து முக்கிய பிஸ்னஸ் அனைத்தும் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்திருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இதன் வருவாய் 20% வரை அதிகரித்திருந்தது.
டைட்டனின் முக்கியமாக நகை பிஸ்னஸில் கவனம் செலுத்தும் நிலையில், கடந்த காலாண்டில் மட்டும் மொத்தம் 18 ஸ்டோர்களை திறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் இருக்கும் டைட்டன் கடைகளின் எண்ணிக்கையை 559ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் பிறகு நேற்று மட்டும் 3.39% மேல் உயர்ந்து, சில நிமிடங்களில் ரூ. 3211.10 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமானது.

ரூ. 500 கோடி: ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு டைட்டன் நிறுவனத்தில் 5.29 சதவீத பங்குகள் இருக்கும் நிலையில், இதன் மூலம் கொஞ்ச நேரத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.494 கோடி அதிகரித்தது. நாட்டின் டாப் வாட்ச் மற்றும் நகை தயாரிப்பு நிறுவனமான டைட்டனின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராக ரேகா இருக்கிறார். டைட்டன் நிறுவனத்தில் மட்டும் அவரது பங்குகள் கணிசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்னஸ் மாடல் சிறப்பாக இருப்பதால் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் வரும் காலத்தில் அதிகரிக்கவே செய்யும் என வல்லுநர்கள் கூறும் நிலையில் ரேகாவின் சொத்து மதிப்பும் அதிகரிக்கவே செய்யும்.
யார் இவர்: ரேகா ஜுன்ஜுன்வாலாவின் மறைந்த கணவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தனது 62 வயதில் காலமானார். அவர் மறைந்ததை தொடர்ந்து மனைவி ரேகாவுக்கு டைட்டன், மெட்ரோ பிராண்ட்ஸ், ஸ்டார் ஹெல்த், டாடா மோட்டார்ஸ் மற்றும் கிரிசில் உட்பட 29 நிறுவனங்கள் உட்பட நிறுவனங்களில் அவர் செய்த முதலீடு ரேகாவுக்கு வந்தது.
ரேகா ஜுன்ஜுன்வாலா செப்டம்பர் 12, 1963இல் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், 1987இல் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை திருணம் செய்து கொண்டார்.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு 6.1 பில்லியன் டாலராக இருக்கிறது. அவர் மாதம் ஒன்றுக்கு ரூ.650 கோடி வரை சம்பாதிப்பதாக லைவ்மிண்ட் குறிப்பிட்டுள்ளது. அவர் இப்போது மும்பையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 14 மாடி பங்களாவில் வசித்து வருகிறார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications