பாகிஸ்தானை செதில் செதிலாக காலி செய்த இந்தியா! பின்னாலிருந்து கை கொடுத்ததே ரஷ்யா தான்! வெளியான தகவல்
டெல்லி: இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் சமயத்திலும் கூட ரஷ்யாவின் ஆயுதங்களை நமக்கு பெரியளவில் கை கொடுத்ததாம். இதன் காரணமாக இந்த வாரம் புதின் இந்தியாவுக்கு வரும்போது முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவுக்கு உலகின் பல்வேறு நாடுகளுடனும் நல்லுறவு இருக்கிறது. இந்த உறவுகள் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து மேம்பட்டே வந்துள்ளது. அதில் குறிப்பாக ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு ரொம்பவே முக்கியமானது. இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாகவே இந்த நட்பு இருக்கிறது. அமெரிக்காவுக்கு முன்பே கூட ரஷ்யா தான் இந்தியாவுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்
இந்தச் சூழலில் தான் ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகிறார். வரும் டிசம்பர் 4, 5ம் தேதிகளில் இந்தியா வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும். மேலும், இந்தியா தனது வான் பாதுகாப்பை மேம்படுத்த அயர்ன் டோர்ன் பாணியில் ஒரு வலுவான பாதுகாப்பு அமைக்க உருவாக்க முயலும் நிலையில், அதிலும் முக்கிய ஒப்பந்தம் ஏற்படலாம்.
சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் கூட ரஷ்யாவின் ஆயுதங்கள் நமக்கு மிகப் பெரியளவில் கை கொடுத்தது. ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள் என இந்தியாவின் வெற்றிக்கு ரஷ்யத் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியது. S-400 பாதுகாப்பு அமைப்பு, பிரமோஸ் ஏவுகணை, சுக்கோய் விமானங்கள் என லிஸ்ட் போய் கொண்டே இருக்கும்.
வளர்ச்சி
இது தொடர்பாக ஏவுகணை விஞ்ஞானியும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே. சரஸ்வத் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல காலமாகவே பாதுகாப்பு ஒத்துழைப்பு இருக்கிறது. 1970களில் முதலில் ரஷ்யா SAM-2 ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்குக் கொடுத்தது. அதன் பிறகு மிக் -21, மிக்-23, மிக்-27, மிக்-29, மிக்-25 போர் விமானங்கள், T-90 டாங்கிகள், துப்பாக்கிகள் எனப் பலவற்றை நாம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளோம்" என்றார்
பல வகையில் உதவி
தொடக்கத்தில் வெறுமன ஆயுதங்களை வாங்கி விற்பது என்பதில் இருந்து பிறகு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வது வரை இந்த உறவு வளர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த உறவு மிக வேகமாக முன்னேறி உள்ளது. இரு நாடுகளும் இணைந்து கூட பாதுகாப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க ஆரம்பித்தது. பிரமோஸ் ஏவுகணை கூட இதுபோன்ற கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது தான். இதன் காரணமாக Brahmaputra மற்றும் Moscow நதிகளின் பெயர்களைச் சேர்த்து அதற்கு BrahMos பெயரிட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பிரம்மோஸ் நமக்குப் பெரியளவில் கை கொடுத்தது. ஒலியை விட வேகமாகச் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானைக் கதறவிட்டது என்பதுதான் உண்மை. அதேபோல ரஷ்யாவின் எஸ்400 பாதுகாப்பு அமைப்பும் நமக்குப் பெரியளவில் உதவியது. பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வழியிலேயே எஸ்400 அழித்தது. இந்தியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது பெரியளவில் கை கொடுத்தது. இதன் காரணமாகவே கூடுதல் எஸ்400 பாதுகாப்பு அமைப்புகளையும் கூட வாங்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.
ரஷ்யா
அதேபோல இந்தியாவின் விமானப் படையின் முக்கிய தூணாக சுகோய் போர் விமானங்கள் உள்ளன. ரஷ்யாவின் உரிமத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இது முக்கிய தாக்குதல்களை நடத்த உதவின. இப்படித் தான் பாகிஸ்தானைக் காலி செய்ய எல்லா வகைகளிலும் நமக்கு ரஷ்யா தொழில்நுட்பம் உதவியது. ஆபரேஷன் சிந்தூர் என்றில்லை கடந்த காலங்களில் பல முறையும் இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்க ரஷ்யா தவறியதே இல்லை.












Click it and Unblock the Notifications