ஒரு விஷயம்! இரு வழக்கு! கூடாது! செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க இதுதான் காரணம்! நீதிபதி உறுதி
டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம். இதன் மூலம் 15 மாதங்கள் கழித்து செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் இருந்த போதே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இரு தரப்பும் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து இறுதி வாதங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. அப்போது இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டவை எவை என்பதை பார்க்கலாம்.
அதாவது டிரிபிள் டெஸ்ட் என சொல்லக் கூடிய ஒரு விஷயத்தை நீதிபதிகள் பார்த்தனர்.
- குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டார்.
- குற்றம்சாட்டப்பட்டவர் எந்த ஆதாரத்தையும் சிதைக்க மாட்டார்.
- குற்றம்சாட்டப்பட்டவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார்.
மேற்கண்ட இந்த 3 விஷயங்கள்தான் ஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போது முக்கியமானதாக பார்க்கப்படும். அதுதான் செந்தில் பாலாஜிக்கும் பார்க்கப்பட்டது. அடுத்தது விசாரணை கைதியை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அது போல் இந்த வழக்கில் முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டது என்னவென்றால் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி , தனது அதிகாரத்தை பயன்படுத்தி போக்குவரத்துத் துறையில் 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.62 கோடி பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது.
எனவே இந்த குற்றச்சாட்டையும் குற்றப்பத்திரிகையையும் அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை நடத்த முடியாது. அதாவது ஒரு விஷயத்தை வைத்து இரு வழக்குகளை நடத்த முடியாது என்பதும் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமாக இருந்தது. இதைத்தான் முகுல் ரோத்தகி போன்றோர் வாதிட்டனர்.
இதையடுத்து செந்தில் பாலாஜி வெகு சில நிமிடங்களிலேயே ஜாமீன் தீர்ப்பானது வழங்கப்பட்டுவிட்டது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனையில் இருவர் அவருக்கு ரூ 25 லட்சம் பிணை செலுத்த வேண்டும். திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும் அவர் அமைச்சராக பதவி வகிக்க எந்த தடையும் வகிக்கவில்லை.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications