அந்த 4 பேர்! முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு கிடைத்தது எப்படி தெரியுமா?
டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவியை பெற சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியாக சித்தராமயைா வென்றுள்ளார். டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையா முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க அவருக்கு கட்சி மேலிட தலைவர்கள் 4 பேர் பக்கபலமாக இருந்ததும், சோனியா காந்தி ‛மேஜர் ரோல் ப்ளே' செய்ததும் தெரியவந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. கர்நாடகா சட்டசபைக்கான 5 ஆண்டு ஆட்சிகாலம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்தது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டசபை தான் அமையும், கிங்மேக்காரக ஜேடிஎஸ் உருவெடுக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
இந்த கருத்து கணிப்புகள் அனைத்தையும் உடைத்து காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லியில் கடந்த 2 நாட்களாக அவர்கள் முகாமிட்டு முதல்வர் பதவியை பெற மேலிட தலைவர்களை சந்தித்து காய்நகர்த்தி வந்தனர். இதில் இறுதியாக சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இருவரும் பெரும் பங்கு வகித்த நிலையில் தான் டிகே சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி கண்டிப்பாக வேண்டும் என அடம்பிடித்தார். ஆனால் அவரது பிடிவாதம் கைக்கொடுக்கவில்லை. மாறாக முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்ததன் பின்னணியில் 4 முக்கிய தலைவர்கள் உள்ளனர்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றவுடனே அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் ரிசல்ட் வெளியாகி 4 நாள் ஆன நிலையில் நேற்று தான் சித்தராமையா முதல்வர் என்பது உறுதியானது. இந்த இழுபறிக்கு டிகே சிவக்குமார் தான் முக்கிய காரணமாகும். இருப்பினும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் தொடக்கம் முதலே சித்தராமையாவுக்கு ஆதரவாக இருந்தனர்.

2013-2018 ஆட்சியை சிறப்பாக நடத்தியதாலும், சீனியர் தலைவர் என்பதோடு கட்சிக்குள் நிலவும் அதிருப்தியாளர்களை சரிகட்டும் பண்பு உள்ளிட்டவற்றால் ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு ஆதரவாக இருந்தார். அதேபோல் சித்தராமையா முன்பு முதல்வராக இருந்தபோது கேசி வேணுகோபால் தான் கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. இதனால் தான் டெல்லிக்கு சென்ற பிறகு 3 முறை கேசி வேணுகோபாலை சித்தராமையா சந்தித்து பேசினார். மேலும் கேசி வேணுகோபாலும் சித்தராமையாவுக்கு தான் முதல்வர் பதவி கொடுப்பது நல்லது என மேலிடத்திடம் பரிந்துரை செய்தார்.
மேலும் மல்லிகார்ஜூன கார்கேவும் கூட சித்தராமையின் பக்கம் சாய்ந்தார். அதாவது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் சித்தராமையா ஆட்சியை கவனித்து கொள்வதும், டிகே சிவக்குமார் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக செயல்படுவது தான் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என அவர் விரும்பினார். இதனால் மல்லிகார்ஜூன கார்கேவின் முதல்வர் சாய்சும் சித்தராமையாகவே இருந்தது. இருப்பினும் கூட மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் எடுத்து கூறியும் டிகே சிவக்குமார் முதல்வர் பதவி வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்.
இந்த சமயத்தில் தான் சோனியா காந்தி ‛மேஜர் ரோல்' ப்ளே செய்தார். அதாவது டிகே சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தினார். அப்போது ‛‛உங்களின் உழைப்பு எங்களுக்கு தெரியும். உங்களின் தியாகத்தையும், கடின உழைப்பையும் நாங்கள்மறக்கவில்லை. உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக நாங்கள் இருப்போம். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியம். கர்நாடகாவில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்ற வேண்டும். இதற்கு உங்களின் உழைப்பு வேண்டும். இதனால் துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும். முதல் 2 அல்லது இரண்டரை ஆண்டுகள் போகட்டும். அதன்பிறகு நிச்சயம் உங்களுக்கு முதல்வர் பதவியை வழங்குவோம்.
மேலும் உங்களுக்கு தற்போது 62 வயது தான் ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் அரசியலில் ஜொலிக்கலாம். இதனால் அதிருப்தி வேண்டாம். சித்தராமையாவும் மூத்த தலைவர் தான். அவருக்கும் கட்சியில் செல்வாக்குடன் உள்ளார். இதனால் துணை முதல்வர் பதவியை ஏற்பதோடு, உற்சாகமா செயல்பட்டு காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பரிசாக கொடுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் காங்கிரஸ் கட்சியில் உண்டு'' எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் சித்தராமையா முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டவர்கள் உதவி செய்துள்ளனர். மாறாக தற்போதைய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்கள் டிகே சிவக்குமாருக்கு முதல்வராக வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிக எம்எல்ஏக்கள் சித்தராமையாவின் பக்கம் இருப்பது மற்றும் தற்போதைய சூழலில் ஆட்சியை விட கட்சியை வளர்ப்பது தான் முக்கியம் என்பதை அறிந்து சோனியா, ராகுல், கார்கே, கேசி வேணுகோபால் ஆகியோர் எடுத்த முடிவுக்கு பிரியங்கா காந்தியும், ரன்தீப் சுர்ஜேவாலாவும் கட்டுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications