உங்க பர்ஸை பாருங்க.. ஏடிஎம் கார்டு இருந்தாலே போதும்! 30 லட்சம் வரை கிடைக்கும்.. மிஸ் பண்ணாதீங்க
டெல்லி: இப்போது கிட்டத் தட்ட அனைவரிடமும் ஏடிஎம் கார்டுகள் இருக்கவே செய்கிறது. அந்த ஏடிஎம் கார்டுகள் மூலம் 30 லட்சம் வரையிலான நன்மைகளைப் பெற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அது எப்படி என்று பார்க்கலாம்.
நம்மில் பலரும் இப்போது வங்கி நெட்வோர்கில் இருந்தாலும் கூட, பலரும் வங்கிகளுக்குச் சென்று குறைந்தது சில மாதங்கள் ஆவது ஆகியிருக்கும். இதற்கு முதலில் காரணமாக இருந்ததே ஏடிஎம் கார்டுகள் என்று அழைக்கப்படும் டெபிட் கார்டுகள் தான்.

ஒவ்வொரு முறையும் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க வேண்டும் என்று இருந்த நிலை மாறி, எப்போது நமக்குத் தேவையோ அப்போது நேரடியாக ஏடிஎம் இயந்திரத்தில் சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கியதே ஏடிஎம் தான்.
ஏடிஎம் கார்டுகள்: மேலும், இதே ஏடிஎம் கார்டுகளை வைத்து ஆன்லைனில் பிடித்த ஷாபிங்கையும் செய்யலாம், மேலும், குறிப்பிட்ட கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்து பணம் செலுத்தினால், பல பிராண்டுகள் மற்றும் ஷாப்பிங் நிறுவனங்கள் தனியாகத் தள்ளுபடிகளையும் வாரிக் கொடுக்கிறது. மேலும், விமான நிலையங்களிலும் லான்ச்சை பயன்படுத்தலாம். இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த ஆப்பர்கள்தான்.

ஆனால் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதலாகக் காப்பீட்டையும் பெறுவார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியவே தெரியாது. வங்கிகள் தரும் இந்த முக்கியமான வசதியைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிகள்: கிட்டதட்ட அனைத்து வங்கிகளும், அரசு வங்கிகளாக இருந்தாலும் சரி தனியார் வங்கிகளாக இருந்தாலும் சரி, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெபிட் கார்டை வழங்கும். இந்த டெபிட் கார்டுகள் மூலம் விபத்துகளால் மருத்துவமனைக்கு அட்மிட் ஆக நேர்ந்தாலோ அல்லது விபத்தினால் மரணம் ஏற்பட்டாலோ காப்பீட்டு தொகையைப் பெற முடியும். இது கார்டு வைத்துள்ளவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிச்சயம் பெரியளவில் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
நமது கார்டு டைப் முதல் பல காரணிகளைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை ரூ. 50,000 முதல் 30 லட்சம் வரை இருக்கும். பொதுவாகச் சாதாரண மாஸ்டர் கார்டிற்கு ரூ. 50 ஆயிரம், கிளாசிக் கார்டிற்கு ரூ.1 லட்சம், விசா கார்டில் ரூ.1.5 முதல் 2 லட்சமும் காப்பீடு இருக்கும். சில குறிப்பிட்ட வகை கார்டுகளுக்கு 30 லட்சம் வரை இருக்கும்.

பர்ஸை பாருங்கள்: உடனே உங்கள் வங்கியில் எந்த டைப் கார்டு இருக்கிறது என்பதைப் பார்த்து பலன்களைப் பெறுங்கள். பெரும்பாலான மக்கள் இது குறித்து அறிந்து கொள்வதில்லை. வங்கிகளும் இது குறித்து நேரடியாக நம்மிடம் தெரிவிப்பதில்லை. இதனால் காப்பீடு பலன்களை நாம் பெற முடியாமலேயே போய்விடுகிறது. இதேபோல கிரெடிட் கார்டுகளுக்கும் காப்பீடுகள் வழங்கப்படுகிறது.
அதேநேரம் வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால் இந்த காப்பீடு ரத்து செய்யப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. சரி இப்போது ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்துவிடுகிறார் என்றால் அவரது குடும்பத்தினர் இந்த காப்பீட்டுத் தொகையை எப்படிப் பெறலாம் என்பதைப் பார்க்கலாம். இந்த காப்பீடு குறித்து மக்கள் அறிந்து வைத்திருப்பதே அரிலும் அரிதாக இருப்பதால் பெரும்பாலும் யாரும் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பிப்பதில்லை.

என்ன செய்ய வேண்டும்: சம்பந்தப்பட்ட நபர் விபத்தில் சிக்கியவுடன், காப்பீட்டுக் கோரிக்கையைத் தாக்கல் செய்ய நாம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்தில் சிக்கியவர் குறித்த அனைத்து ஆவணங்கள், பில்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடைய எல்லா மருத்துவ ரெக்கார்டுகளையும் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். அதேநேரம் அவர் உயிரிழந்திருந்தால் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை தேவை.
மேலும், போலீஸ் அறிக்கை, இறப்பு சான்றிதழ் மற்றும் இறந்த நபரின் ஓட்டுநர் உரிமம் உட்பட எதாவது ஒரு ஆவணம் தேவைப்படும். மேலும், கடந்த 60 நாட்களில் எதாவது ஒரு முறையாவது அந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் காப்பீட்டைப் பெற முடியும்.
ஒரு நபர் பயன்படுத்தும் கிரெட்டிட் மற்றும் டெபிட் கார்டுகளை பொறுத்து விபத்து மரணக் காப்பீடு என்பது ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரை கூட இருக்கும். கார்டுகளை 60 நாட்களில் ஒரு முறை பயன்படுத்தியிருந்தாலே இதை நாம் பெறலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications