2000 ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம்.. எவ்வளவு பணம் வரை மாற்றலாம்?
டெல்லி: நாட்டில் திரும்ப பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம்.. எத்தனை நாள் வரை அவகாசம், எவ்வளவு பணம் வரை ரொக்கமாக மாற்றலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியால் , நாடு முழுவதம் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டுகளும், பின்னர் 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

போதிய அளவு ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு குறைய 6 மாதங்கள் வரை ஆனது. மக்கள் ஏடிஎம்களில் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.வங்கிளில் பண டெபாசிட் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. வங்கிகள் ஒரு கட்டத்தில் டெபாசிட்டிற்கான வட்டிகளை அதிரடியாக குறைத்தன. அந்த அளவிற்கு தாக்கம் இருந்தது.
படிப்படியாக நோட்டுக்கள் புழக்கம் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எல்லாம் இயல்பு நிலையை அடைந்தது. சரியாக 2018ம் ஆண்டே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இதில் தற்போது 2000 நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் சுமார் 3,5 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 2000 ரூபாய் நோட்டுக்களை விட தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பார்ப்தே அரிதாகிவிட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் மற்றும்/அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத்தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம்
அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது. மேலும் தினசரி ரூ.20,000 வரை எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30ம் தேதி வரை இப்படி மாற்றிக்கொள்ள முடியும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications