திருடு போன மொபைலை கண்டுபிடிப்பது எப்படி? மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூப்பர் போர்டல்!
டெல்லி: திருடு போன செல்போனை கண்டுபிடிக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்தால் மொபைலை மீட்டுத்தரும் வசதி உள்ளது. இதில் எப்படி திருடு போன மொபைலை கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
திருடு போன செல்போனை கண்டுபிடிக்க சஞ்சார் சாத்தி போர்டல் என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் செல்போன் பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கவும் , செல்போன் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
நீங்கள், புதிய/பழைய மொபைல் ஃபோனை வாங்கும் போது, குடிமக்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட ஐஎம்ஐ எண்களை அறிந்து கொள்ளவும், அவர்களுக்குத் தேவையில்லாத இணைப்புகளைத் துண்டிக்கவும், தொலைந்த மொபைல் போன்கள தேடவும் மற்றும் சாதனங்களின் உண்மையான தன்மையை சரிபார்க்கவும் இந்த சஞ்சார் சாத்தி இணைய தளம் https://sancharsaathi.gov.in/ முழு சுதந்திரம் வழங்குகிறது .

இந்த சஞ்சார் சாத்தி போர்டலில் CEIR, TAFCOP போன்ற பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
CEIR என்ற ஆப்ஷனில் தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களைக் கண்டறியலாம். தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களை அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கில் தடுக்கவும் இந்த போர்டல் உங்களுக்கு உதவும். இந்த போர்டலில் தொலைந்த போனின் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்தால், தொலைந்த/திருடப்பட்ட சாதனங்களை யாரும் இந்தியாவில் பயன்படுத்த முடியாது.
தடுக்கப்பட்ட மொபைல் போனை யாரேனும் பயன்படுத்த முயன்றால், அதன் ட்ரேஸ்பிலிட்டி உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் எங்கிருந்தாலும் மொபைலை கண்டுபிடித்து விடலாம்.
மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதும், குடிமக்களின் இயல்பான பயன்பாட்டிற்காக சஞ்சார் சார்த்தி போர்ட்டலில் தடைநீக்கி கொள்ளலாம்.
TAFCOP ஆப்சனில் ஒரு மொபைல் சந்தாதாரர் தனது பெயரில் எத்தனை சிம் உள்ளது என்பதை சரிபார்க்கலாம். சந்தாதாரர் தேவையில்லாத அல்லது யுஸ் பண்ணாத சிம்கள் குறித்து புகாரளிக்கவும் இது உதவுகிறது.

கூடுதலாக, Keep Yourself Aware வசதி உள்ளது. இது செல்போன் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய சமீபத்திய அப்டேட்களை அறியலாம். அத்துடன் செல்போன் பயன்படுத்துவது குறித்து அரசின் விழிப்புணர்வு தகவல்களை அறியலாம்.
https://sancharsaathi.gov.in/ இணைய தளம் மூலம் திருடு போன மொபைலை
எப்படி கண்டுபிடிப்பது என்பதை இப்போது நாம் பார்ப்போம். முதலில் https://sancharsaathi.gov.in/ தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் CEIR என்ற ஆப்ஷனில் உள்ளே போக வேண்டும். அதில் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்கள் தொலைந்து போன செல்போன் எங்கிருந்தாலும் பிளாக் செய்ய முடியும். அதன் பிறகு காவல்துறையில் புகார் அளித்து உங்கள் செல்போனை எளிதாக மீட்கலாம். அதன் பிறகு உங்கள் செல்போனை யாராவது பயன்படுத்த முயன்றால் , அவர்களால் பயன்படுத்த இயலாது. ஏராளமானோர் இந்த வசதியாகி போது பயன்படுத்தி வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications