ஆதார் அவசியமில்லை.. ஸ்கூல் ஐடி போதும்.. சிறார்களுக்கு வேக்சின் ரிஜிஸ்டர் செய்வது எப்படி? FULL GUIDE
டெல்லி: இந்தியாவில் 15-18 வயது கொண்ட சிறார்களுக்கு வேக்சினும், 60+ வயது கொண்ட உடல் உபாதை உடையவர்களுக்கும் மூன்றாவது டோஸும் எப்படி போடப்படும், இதற்கு எப்படி ரிஜிஸ்டர் செய்யப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் வயதானவர்களுக்கு மூன்றாவது டோஸ், சிறார்களுக்கு வேக்சின் ஆகிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்தியாவில் ஜனவரி 10ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும்
மேலும் ஜனவரி 3ல் இருந்து இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் இதே தேதிகளில் வேக்சின் வழங்குவது தொடங்கப்படும்.

எப்படி?
இந்த நிலையில் மக்கள் இடையே குழந்தைகளுக்கு எப்படி வேக்சின் போடுவது என்ற குழப்பம் நிலவி வருகிறது. அதேபோல் வயதானவர்கள் 3வது வேக்சின் போட உடல் உபாதைகள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதை எப்படி நிரூபிப்பது என்ற கேள்விகள் பலரிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் Cowin தளத்தின் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா, இதற்கு எப்படி பதிவு செய்வது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறார்கள் வேக்சின் ஐடி
அதன்படி 15-18 வயது கொண்ட சிறார்களுக்கு பின் வரும் முறைப்படி வேக்சின் ரிஜிஸ்டர் செய்ய முடியும்.
https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வரும்.
இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும்.

வயது முக்கியம்
பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் மற்ற அடையாள அட்டை இருக்காது. அவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும். 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபித்தால் போதும்.
பெற்றோரே என்ன வேக்சின் என்பதை தேர்வு செய்யலாம். 15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைடஸ் கேடிலா நீடில் இல்லாத வேக்சின் இரண்டும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

பூஸ்டர் டோஸ்
பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதற்கு 60+ வயது கொண்டவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் ( மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள் தவிர்த்து)
இவர்கள் 9 மாதங்களுக்கு முன் 2வது டோஸ் போட்டிருக்க வேண்டும்.
அவர்களுக்கு 20 வகையான உடல் உபாதைகளில் ஒன்றாவது இருக்க வேண்டும்.அப்போதுதான் வேக்சின் போட தகுதி உடையவர்களாவர் .
Recommended Video

உடல் உபாதை
இருதய நோய்கள், நீரிழிவு நோய், ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய் அல்லது டயாலிசிஸ், சிரோசிஸ், புற்றுநோய், நீண்டகால செல் நோய் மற்றும் ஸ்டெராய்டுகள் அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளின் நீண்டகால பயன்பாடு போன்ற உடல் உபாதைகள் கொண்டவர்கள் இந்த 3வது டோஸ் எடுக்க தகுதி பெற்றவர்கள்.
இவர்கள் என்ன வேக்சினை தேர்வு செய்யலாம் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.












Click it and Unblock the Notifications