ம.பி. கமல்நாத், ஹரியானா ஹுடா.. மாநிலந்தோறும் 'சகுனி'களை அனுமதித்தால் எப்படி ஜெயிக்கும் காங்கிரஸ்?
டெல்லி: நாட்டின் மாநிலங்களில் பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்துவிட்டால் வாக்காளர்கள் பாஜகவையே அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கின்றனர்; காங்கிரஸ் கட்சியால் மாநிலங்களில் எங்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை என ஹரியானா தேர்தல் வெற்றிக்குப் பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அரசியல் அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என நினைத்தால் ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் அதாவது பாஜகவை மாநிலங்களில் அதிகாரத்தில் இருந்து அகற்ற முடியாததன் காரணத்தை சரி செய்ய வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஹரியானாவில் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய அதிருப்தி அலை இருந்தது. பாஜகவுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேல் போராடிய விவசாயிகள் பெரும்பாலும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்; மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாலியல் சர்ச்சை விவகாரத்தில் உக்கிரப் போராட்டம் நடத்தியவர்களும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்; அக்னி வீரர்கள் திட்டத்தால் அதிகமான பாதிப்பை எதிர்கொண்டதும் ஹரியானா இளைஞர்கள்தான். இந்த தரப்புகளை ஒருங்கிணைத்து பாஜகவை எளிதாக வீழ்த்தி இருக்க வேண்டியது காங்கிரஸ். ஆனால் ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கோட்டை விட்டுவிட்டது.

ஹரியானாவில்தான் என்று இல்லை.. இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசியது. அப்போதும் மிதமிஞ்சிய நம்பிக்கையால் மத்திய பிரதேசத்தில் வெல்ல முடியாத நிலைக்குப் போனது காங்கிரஸ்.
ம.பி. கமல்நாத்: மத்திய பிரதேசத்தில் தாமே சீனியர்; தாமே அனைத்து முடிவுகளும் எடுப்பேன் என ஓவர் கான்பிடன்ட்டாக செயல்பட்டவர் முன்னாள் முதல்வர் கமல்நாத். டெல்லி காங்கிரஸ் மேலிடமும் கமல்நாத்தை ஓவர் டேக் செய்யவில்லை. மத்திய பிரதேசத்தில் மற்றொரு சீனியரான திக்விஜய் சிங் இருந்தும் அவரை ஓரம் கட்டித்தான் கமல்நாத் ஆட்டம் ஆடினார். அவரது ஆதரவாளர்களுக்கே சீட் கொடுத்தார். கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு கை கோர்த்தபடி வெற்றியை அறுவடை செய்ய முன்வராமல் 'ஈகோ'வுடன் தாமே எல்லாம் என கமல்நாத் செயல்பட்டதால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது.
ஹரியானா ஹூடா: ஹரியானாவிலும் இதே நிலவரம்தான். ஹரியானாவில் கமல்நாத்தைப் போலவே செயல்பட்டவர் மாஜி முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. ஹரியானாவில் தலித் தலைவரான குமாரி செல்ஜா போன்றவர்கள் இருந்தும் அரவணைத்துச் செல்ல மறுத்தவர் ஹூடா. தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த 90 வேட்பாளர்களில் 70 பேர் ஹூடாவின் ஆதரவாளர்கள். அதுவும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். குமாரி செல்ஜா, சுர்ஜேவாலா போன்றவர்கள் மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டு தேர்தல் களத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் டெல்லி மேலிடமும் இதனை கண்டு கொள்ளாமல் அனுமதித்தது. இதன் பலனைத்தான் அனுபவிக்கிறது காங்கிரஸ். எளிதாக கிடைக்க வேண்டிய வெற்றிகளை இப்படி தனி மனிதர்களை நம்பி மோசம் போவது காங்கிரஸுக்கு வாடிக்கையாகிவிட்டது; ஒவ்வொரு மாநிலத்துக்கும் இப்படியான சகுனிகளை சுமந்து கொண்டு அனுமதித்தால் எப்போதுமே காங்கிரஸ் கட்சியால் மாநிலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
மேலிடத்தின் அக்கறை: ஹரியானா, மத்திய பிரதேசம்தான் என்றில்லை.. காங்கிரஸ் கட்சி சற்று வலிமையாக இருக்கும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதே நிலைமைதான். ஆகையால் காங்கிரஸ் மேலிடமே இதில் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டினால் என்ன போராடி என்ன பயன் என்பதும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் குமுறல்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications