அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் சக்திவாய்ந்த 'டொமாஹாக்' ஏவுகணைக்கு இணையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எல்ஆர்எல்ஏசிஎம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை என்பது பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில் அதன் சிறப்பம்சம் பற்றி இங்கு பார்க்கலாம்.

DRDO launches indigenous long-range LRLACM cruise missile test

ஒடிசா கடற்கரையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்ட தூர நிலத்தடி தாக்குதல் குரூஸ் ஏவுகணையின் (LRLACM) முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது அமெரிக்காவின் 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணைக்கு இணையான இந்தியாவின் ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.

நம் நாடு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த முப்படைகளை கொண்ட பாதுகாப்பு துறைக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கும் பட்ஜெட் தொகையின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் முப்படைகளையும் வலுப்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் டிஆர்டிஓ சார்பில் (Defence Research and Development Organisation or DRDO) சார்பில் Long Range Land Attack Cruise Missile (LRLACM) ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவின் கடற்கரை பகுதியில் இருந்து இந்த 'லாங்க் ரேஞ்ச் லேண்ட் அட்டாக் குரூஸ் ஏவுகணை' வானில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் ஏவுகணையின் தொழில்நுட்பம் உள்பட அனைத்து செயல்பாடும் சிறப்பாக இருந்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இப்போது வெற்றி பெற்றிருந்தாலும் உடனடியாக ராணுவத்தில் சேர்க்கப்படாது. ராணுவத்தில் சேர்க்க 2 ஆண்டுகள் வரை 'டைம்' எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இன்னும் சில சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு ராணுவம் ரகசியம் காத்து வருகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஏவுகணை முழுக்க முழுக்க 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். 'நிர்பய்' என்ற ஏவுகணை திட்டத்தின் மேம்பட்ட வகையில் இந்த எல்ஆர்எல்ஏசிஎம் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகள் இணைந்து ஏவுகணையை தயாரித்துள்ளன. பெங்களூருவை தளமாகக் கொண்ட ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட் (ADE) தான் இந்த ஏவுகணையின் ஆய்வமாக உள்ளது.

குரூஸ் வகையை சேர்ந்த இந்த ஏவுகணை சுமார் 1,000 முதல் 1,500 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் நம் நாட்டில் எல்லை பகுதிகளில் இருந்து சீனா மற்றும் பாகிஸ்தானின் முக்கிய ராணுவம், பொருளாதாரம் சார்ந்த கட்டமைப்புகளை குறிவைத்து துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி (பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள இடம்), லாகூர், பைசலாபாத் மற்றும் பாகிஸ்தானின் முக்கிய கடற்படை தளங்களைக் கொண்ட அதன் மிகப்பெரிய பொருளாதார மையமான கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் பெரும் பகுதிகளை இலக்கு வைக்க முடியும்.

அதேபோல் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகிலுள்ள வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் இந்த ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டால், சீனாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பல ராணுவ மையங்களை தாக்க முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சீனாவின் ராணுவ உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள லாசா, செங்டு (ஒரு முக்கிய ராணுவ மையம்), உரும்கி (ஜின்ஜியாங்கில் உள்ள முக்கிய ராணுவ மையம்) மற்றும் குன்மிங் போன்ற பகுதிகளை இந்த ஏவுகணையால் தாக்கி அழிக்க முடியும்.

இந்த ஏவுகணையை தரையில் இருந்தும், போர்க்கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கி கப்பல்களிலும் இருந்து எதிரி நாடுகளின் இலக்குகளை நோக்கி அனுப்பி தாக்க முடியும். அதோடு அணுஆயுதங்களையும் இந்த ஏவுகணையால் சுமந்து சென்று தாக்க முடியும். இந்த ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணையை போல் இன்றி மிகக் குறைந்த உயரத்தில் பறந்து இலக்குகளை தாக்கும். இதனால் எதிரிகளின் ரோடார் மற்றும் பாதுதுகாப்பு அமைப்புகளாக எளிதில் இதனை கண்டுபிடிக்க முடியாது.

இந்த ஏவுகணை இந்தியாவின் 'டொமாஹாக்' என அழைக்கப்படுகிறது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இந்த ஏவுகணை என்பது அமெரிக்காவின் 'டொமாஹாக்' (TOmahawk)ஏவுகணைக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இந்த 'டொமாஹாக்' ஏவுகணையை வைத்து அமெரிக்கா எதிரி நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி பேரழிவை கொடுத்து வருகிறது. கடந்த 1983ம் ஆண்டு இந்த 'டொமாஹாக்' ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது. இது தான் அமெரிக்க ராணுவத்தின் நீண்ட தூர தாக்குதல் திறன்கள் கொண்டதாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் 'டொமாஹாக்' ஏவுகணை அமெரிக்க ராணுவத்தின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது. 1991 முதல் அமெரிக்கா நடத்திய அனைத்து போர் மற்றும் பிற நாடுகளுடனான மோதல்களிலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது. சதாம் உசேன் தலைமையிலான ஈராக் படைகள் குவைத்து மீது படையெடுத்த போது நடந்த 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' போரின் போதுதான் முதன்முதலில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த ஏவுகணையில் 50க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் நடந்த ஈரான் போரிலும் அமெரிக்கா இந்த ஏவுகணையை பயன்படுத்தியது. ஈரான் மீது அமெரிக்கா 49 'டொமாஹாக்' ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் டெஹ்ரான், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, கிஷ், மினாப் மற்றும் இஸ்பஹானின் சில பகுதிகளை இந்த 'டொமாஹாக்' ஏவுகணையை வைத்து தான் அமெரிக்கா தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 'டொமாஹாக்' ஏவுகணையின் வரம்பு 1,250 கிலோமீட்டர் முதல் 2,500 கிமீ தொலைவாகும். மிக குறைந்த வேகத்தில் அதிக சப்சோனிக் வேகத்தில் (மணிக்கு 880 கிமீ) பறந்து சென்று தாக்க கூடியவை. 'பிளாக் IV டாக்டிகல் டொமாஹாக்' (Block IV Tactical Tomahawk) பறக்கும் போதே இலக்குகளை மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது. இதனால் தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து இந்த வகை ஏவுகணையை பெற அதிக ஆர்வம் காட்டினார்.

இப்படி தனி சிறப்புகள் கொண்ட அமெரிக்காவின் 'டொமாஹாக்' ஏவுகணைக்கு நிகராக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நம்முடைய எல்ஆர்எல்ஏசிஎம் ஏவுகணை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான், சீனா நடுங்கிப்போய் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+